சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
குற்றவியல் வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள், அதன் மீதான தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள், ஆள்கொணர்வு மனு, இந்த மனுக்கள் தொடர்புடைய துணை மனுக்களுக்கு இதுவரை ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்குகளில் வழக் கறிஞர்கள் ஆஜராவதற்கான மெமோ ஆப் அப்பியரன்ஸ் மனுக்களுக்கு இதுவரை கட்டணம் இல்லாமல் இருந்தது. இதற்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுநலன் மனுக்கள் உள்ளிட்ட ரிட் பிரதான மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.1000 ஆகவும், ரிட் மனுக்கள் தொடர்புடைய துணை மனுக்களுக்கான கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும், சீராய்வு மனுக்களுக்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு தவிர்த்து உரிமையியல் நடைமுறை சட்டம் 144-வது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு எதிரான அனைத்து உரிமையியல் பலவகை மேல்முறையீடு மனுக்களுக்கான கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.2000 ஆகவும், சமரசத் தீர்வு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான உரிமையியல் பலவகை மேல்முறையீடு மனுக்களுக்கான கட்டணம் ரூ.5000-ல் இருந்து குறைந்தபட்சம் வழக்கில் தொடர்புடைய சொத்தின் மதிப்பில் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் ரூ.ஒரு லட்சம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
உரிமையியல் நடைமுறைச் சட்டம் 115-வது பிரிவில் கீழுள்ள உரிமையியல் சீராய்வு மனுக்கள் அல்லது சிறு காரணங்களுக்கான நீதிமன்ற சட்டம் பிரிவு 25 கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அல்லது உரிமையியல் வழக்கில் எந்தவொரு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு அல்லது நடைமுறைகளுக்கு எதிரான மேல்முறையீடுகளுக்கான கட்டணம் முறையே ரூ.50, ரூ.100, ரூ.200 என்றிருந்தது ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் 227-வது பிரிவின் கீழ் தாக்கல் செய் யப்படும் உரிமையியல் சீராய்வு மனுக்களுக்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆகவும், விண்ணப்பங்கள், மனுக்களுக்கான கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு வழக் கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மார்ச் 12-ல் பெருந்துறையில் நடைபெறுகிறது. இதில் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்படும் என வழக்கறிஞர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago