ஞாயிற்றுக்கிழமையும் கட்டாய வேலை வாங்குவதா?- கிரண்பேடிக்கு எதிராக புதுவை நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By செ.ஞானபிரகாஷ்

ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாய வேலை வாங்கும் துணை நிலை ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாரை தப்பட்டையுடன் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்ற பிறகு ஞாயிற்றுக்கிழமைகளிலும் துப்புரவு பணியில் ஈடுபட நகராட்சி துப்புரவு தொழிலாளர்களை வலியுறுத்தி வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கட்டாய வேலை வாங்குவதற்கு துப்புரவு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உழவர்கரை நகராட்சி துப்புரவு பிரிவு ஊழியர்கள் சங்கம், உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நலன்காக்கும் சமத்துவ நல சங்கம் மற்றும் உழவர்கரை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அண்ணா தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து கூட்டு போராட்டக்குழுவை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டுக்குழு சார்பில் இன்று பேரணி நடந்தது.

பேரணியில் தாரை தப்பட்டை அடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி வந்தனர். காமராஜர் சாலை,நேருவீதி, மிஷன் வீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி வந்தது. போலீஸார் தலைமை தபால்நிலையம் முன்பு அவர்களை தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டக்குழுத்தலைவர் சகாயராஜ் கூறுகையில், "தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கட்டாய வேலை வாங்குவதை கைவிட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வராத ஊழியர்களிடம் புதன்கிழமை கட்டாய விடுப்பு கடிதம் வாங்குவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக வேலையைப் புறக்கணிப்போம்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்