சிறையில் நடக்கும் மரணங்களைத் தடுக்க நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து சிறைச்சாலைகளை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கொலை, கொள்ளை, தீவிரவாத தாக்குதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என குற்றங்களின் பட்டியல் நீள்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை பல்வேறு காரணங்களால் 2013-ல் 1,806, 2014-ல் 1678, 2015-ல் 1641 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளைக் கைது செய்யும் போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றனர். அதைத் தொடர்ந்து வழக்கு, விசாரணை, தண்டனை என தொடர் நிகழ்வுகள் நடக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டவர் குற்றவாளியாக அடையாளம் காட்டப்படுகிறார். மற்றவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவராகவே அடையாளப்படுத்தப்படுகிறார்.
அதுவரை நீதிமன்ற காவலில் சம்பந்தப்பட்டவர் சிறையில் இருக்க வேண்டியுள்ளது. சிறைச்சாலைகள் மத்திய சிறை, மாவட்ட சிறை, பெண்கள் சிறப்பு சிறை, கூர்நோக்கு இல்லம் என இந்தியா முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட சிறைகள் உள்ளன.
இதில், 2012-ம் ஆண்டு கணக்குப்படி 3 லட்சத்து 85 ஆயிரத்து 135 பேர் சிறையில் இருந்தனர். சிறைகளில் சில நேரங்களில் வன்முறைகளும், இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்களும் நிகழ்வதுண்டு.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் 2000 முதல் 2011-ம் ஆண்டுவரை மொத்தம் 1,242 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளன.
2012-ல் தேசிய குற்றப் பதிவேடு அலுவலக தகவல்கள்படி இந்தியாவில் மொத்தம் 1571 சிறை மரணங்கள் நடத்துள்ளன. இதில் 1516 ஆண்கள், 55 பெண்கள். இதில் ஆண்களில் இயற்கை மரணம் 1345 பேர். தற்கொலை 87, மரண தண்டனை நிறைவேற்றம் 1, சிறைவாசிகளாலேயே கொலை 4, தீ விபத்து 10, கவனக்குறைவு மற்றும் அத்துமீறல் 2, பிற 22 ஆகும். பெண்களில் இயற்கை மரணம் 47, தற்கொலைகள் 5, வெளியாட்களால் கொலை 3 ஆகும். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் சிறைக்கு உள்ளே, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மொத்தம் 97 பேர் இறந்துள்ளனர்.
* சிறை மரணங்களைத் தடுப்பது எப்படி? என சமூக நல ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் கூறியதாவது:
சிறையில் இருப்பவர்கள் குடும்பத்தை, நட்பைப் பிரிந்து மன உளைச்சலில் இருப்பார்கள். அவர்களுக்கு முறையான கவுன்சலிங் வழங்க வேண்டும்.
உடல்நிலை முடியாமல் போனால் வெளி மருத்துவ மனைக்கு உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பிட வசதி உள்பட அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் தொற்றுநோய் பரவலைத் தடுக்கலாம். தனித் திறமையை வளர்த்துகொள்வதற்கு வாய்ப்பு கள் ஏற்படுத்த வேண்டும். படிப்பதற்கான வாய்ப்பாக நூலகம் அமைத்து கொடுக்க வேண்டும். சிறைவாசிகளின் மனித உயிர்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். சிறைச்சாலைகளை நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து அதை அவர்களே கண்காணிக்க வேண்டும். காவல் துறை கட்டுப்பாட்டில் சிறைச்சாலை களை விடக்கூடாது. தண்டனை காலம் முடிந்தவர்களை உடனடி யாக விடுவிக்க வேண்டும். சிறை யில் இருப்பவர்களில் பெரும்பாலா னோர் ஏழைகள். அவர்களுக்கு சட்ட அறிவு குறைவு. எனவே, சட்ட உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago