மீனவர்கள் பிரச்சினையில் அரசுக்கு கவலையில்லை: திமுக சாடல்

By செய்திப்பிரிவு



நாகை மீனவர்களின் உண்ணாவிரதம் குறித்து, அதிமுக அரசு கவலைப்படவில்லை என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக் கோரி, நாகப்பட்டினம் பகுதியில் வாழும் கிராம மக்கள் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 210 பேரை, அவர்களுடைய படகுகளுடன் மீட்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதைப் பற்றி அ.தி.மு.க., அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் மீனவர்களைச் சந்தித்து பேசுவதற்காக, தி.மு.க., தலைமையின் சார்பில், நாடாளுமன்றக் குழு தி.மு.க., தலைவர் டி.ஆர். பாலுவை நேரில் செல்லுமாறு, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்