விபத்தால் முடங்கியவர் இயற்கை சூழலால் எழுந்தார்; வீட்டைச் சுற்றி மூலிகை வனம்: பறவை முதல் பாம்புகள் வரை அடைக்கலம் தருகிறார்

By என்.சுவாமிநாதன்

விபத்தில் சிக்கி சக்கர நாற்காலியில் முடங்கிய மனிதர், இன்று பம்பரம் போல் வேகமாய் சுற்றிச் சுழல்கிறார். தன் வீட்டையே இயற்கை போர்த்திய வனமாக மாற்றி வைத்துள்ளார்.

தமிழக, கேரள எல்லையோர பகுதியில் உள்ள மார்த்தாண்டத் தைச் சேர்ந்தவர் சுதிர்லால்(63). 36 சென்ட் பரப்பளவு கொண்ட இவரது இடத்தில் ஒன்றேமுக்கால் சென்ட் பரப்புக்குள் தன் வீட்டை சுருக்கிக் கொண்டவர், மீதமுள்ள இடம் அனைத்திலும் அரிய வகை மூலிகைகள், உள்ளூர் பாரம்பரிய செடிகள், மரங்களை இயற்கை வழியிலேயே வளர்த்து வருகிறார். இயற்கை விவசாய பரப்புரையி லும் ஈடுபட்டு வருகிறார்.

இயற்கை விவசாயம்

இதுகுறித்து சுதிர்லால் கூறும் போது, “வெளிநாடுகளில் கப்பலில் வேலை பார்த்தேன். 1999-ல் துபாய் நாட்டில் வாகன விபத்தில் சிக்கி முழங்காலுக்குக் கீழ் சிதைந்து போனது. முகத்தாடையும் பெயர்ந்து போனது. நடக்க முடியாமல் படுக்கையில் இருந்தேன்.

அதன் பின்னர் மார்த்தாண்டத் தில் உள்ள பூர்வீக வீட்டுக்கு வந்த நான், இயற்கை வழி விவ சாயம் மீதான ஆர்வத்தால் முழு பரப்பிலும் அரிய வகை மூலிகை, உள்ளூரில் மட்டுமே விளையக் கூ டிய பயிர்கள், மரங்களை இங்கு வைத்தேன்.

என் உடல் நிலை தேறி வந்த நிலையில், இடையில் 6 ஆண்டு களுக்கு முன் என் மனைவி உடல் நலமின்மையால் இறந்து போனார். மகன், மகளும் திருமணம் முடிந்து வெளியூரில் வசிக்கின்றனர். அதன்பின் என் முழு கவனமும் இந்த வீட்டை வனமாக மாற்று வதிலேயே இருந்தது. எனக்கான ஆறுதலும், சுகவீனத்தில் இருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்ததும் இந்த வனம்தான்.

மகாகனி, அயனி, நாவல், நிலவேம்பு, வாத முடக்கி, மூலநோய்க்கு மருந்தாகும் துத்தி, வல்லாரை, சிறுகண்பீளை, அம்மான்பச்சரிசி, காந்தாரி மிளகு, சர்வசுகந்தி என பலவிதமான மூலிகை செடிகள் நிற்கின்றன. கொய்யா, பலா, மா உள்ளிட்ட பழவகை மரங்களும் நிற்கின்றன. இவற்றில் காய்க்கும் பழங்களை பறிப்பதில்லை. பறவைகளுக்கு இரையாக மரத்திலேயே விட்டுவிடுகிறேன்.

நாட்டுக் கோழி, வான்கோழி களையும் ஏராளமாக வளர்ந்து வருகிறேன். அவை இங்கே திறந்த வெளியில் மேய்வதால் அவற்றின் கழிவுகளும் உரமாகிவிடுகின்றன.

இங்கு பறவைகளில் இருந்து பாம்புகள் வரை வசிக்கின்றன. ஆனால் ஒன்றுக்கு ஒன்று உணவுச் சங்கிலியாக ஓடுகிறதே தவிர என்னைத் தொந்தரவு செய்தது கிடையாது. கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பலரும் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர்.

இப்போது என் உணவும், வாழ்க்கையும் இந்த வீட்டு வனத்தில் இருந்துதான். மூலிகை யும், மூலிகை சூழ்ந்த இயற்கை காற்றுமே படுத்துக் கிடந்த என்னை எழுந்து இயங்க வைத்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்