பள்ளிக் குழந்தைகளின் பாடப்புத் தகம், நோட்டுப்புத்தகம், ஆசிரியர்களின் ஊதியம் என கல்வி வளர்ச்சிக்காக கிராம மக்கள் இணைந்து பதநீர் விற்பனை செய்கின்றனர்.
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், தூத்துக்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அந்தோணியார்புரம் கிராமம். பனைமரங்கள் மிகுதியாக காணப்படும் இந்த கிராமத்தில் முந்தைய காலத்தில் பதநீரை காய்ச்சி, கருப்பட்டி தயாரித்து, அதிக அளவில் விற்பனை செய்து வந்தனர்.
போதுமான வருமானம் கிடைக் காததால் தற்போது பதநீராகவே விற்பனை செய்து வருகின்றனர். சுத்தமாகவும், தரமாகவும் இருக்கும் இந்த பதநீருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
பதநீர் விற்பனை
பனைத் தொழிலாளர்கள் தனித்தனியாக பதநீர் விற்பனை செய்வதில் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், கிராம மக்களே இணைந்து அனைத்து தொழிலாளர்களிடமும் பதநீரை வாங்கி, தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விற்பனை நிலையம் அமைத்து மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர். இப்பணி கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறுவதுதான் சிறப்பு. இதில் கிடைக்கும் லாபம் கல்வி வளர்ச்சிக்காக செலவு செய்யப்படுகிறது.
கல்வி வளர்ச்சி நிதி
அந்தோணியார்புரத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு அரசு அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. இந்த வகுப்புகளுக்கான ஆசிரியர் களின் ஊதியம், மாணவ, மாணவியருக்கான நோட்டுப் புத்தகம் போன்ற அனைத்து செலவுகளையும் கிராம கமிட்டியே ஏற்றுக் கொண்டது. பதநீர் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை கொண்டுதான் இந்த செலவை மேற்கொள்வதாக கூறுகிறார், பதநீர் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளியான எம்.ராஜன் (44).
தொழிலாளர்கள்
அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஊர் கமிட்டி கூடி பதநீர் விற்பனை குறித்து முடிவு செய்யும். இந்த ஆண்டு பதநீர் விற்பனை செய்யும் பணிக்கு என்னையும், எனது மனைவி செபஸ்தியாயியையும் ஊர் சார்பில் நியமித்துள்ளார்கள். எனக்கு தினமும் ரூ. 400-ம், மனைவிக்கு ரூ. 200-ம் கூலி தருகின்றனர்.
எங்கள் கிராமத்தில் கடந்த ஆண்டு 15 பேர் பனையேறும் தொழில் செய்தனர். இந்த ஆண்டு அது 9 ஆக குறைந்துள்ளது. அவர்களிடம் இருந்து பதநீரை வாங்கி விற்பனை செய்கிறோம்.
ஒவ்வொருவரும் 30 முதல் 50 படி (ஒரு படி என்பது 1.75 லிட்டர்) வரை தினமும் பதநீர் தருவார்கள். ஒரு படி பதநீருக்கு ரூ. 35 விலை கொடுப்போம். பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் ரூ. 40-க்கு விற்பனை செய்கிறோம். ஒரு டம்ளர் ரூ.10.
இந்த ஆண்டு பதநீர் சீஸன் சற்று தாமதமாக ஏப்ரல் 15-ம் தேதிக்கு பிறகு தான் தொடங்கியது. தொடக்கத்தில் தினமும் 65 முதல் 75 படி பதநீர் வந்தது. தற்போது 250 படி வரை வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் வரை சீஸன் இருக்கும்.
எங்களிடம் இருந்து 8 பெண்கள் பதநீரை பானைகளில் வாங்கிச் சென்று தூத்துக்குடி நகருக்குள் விற்பனை செய்கின்றனர்.
தினமும் காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்வோம். பதநீர் மீதமானால் அதனை காய்ச்சி கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்வோம்.
மக்கள் ஆதரவு வேண்டும்
இயற்கை தந்த வரப்பிரசாதம் பதநீர். உடல் சூட்டைக் குறைப்பதுடன் பல்வேறு சத்துக்களையும் தருகிறது. எனவே, ரசாயன குளிர்பான மோகத்தை மக்கள் கைவிட்டு, பதநீரை அதிகம் வாங்கி குடிக்க வேண்டும். அப்போதுதான் நலிவடைந்து வரும் பதநீர் தொழிலை காப்பாற்ற முடியும்’ என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago