வாரியத் தலைவர் பதவி சட்டதிருத்த மசோதா சட்டப்பேரவையில் வியாழக் கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் வியாழக் கிழமை, முதல்வர் ஜெயலலிதா சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத் தடுக்கும்) சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத் தடுக்கும்) சட்டம் குறித்த சில அலுவலகங்கள் அரசிடம் இருந்து பெறக்கூடிய நன்மையை விளம்புகை செய்வதற்காக இயற்றப்பட்டது.
மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர்களாக அல்லது உறுப்பினர்களாய் இருந்து கொண்டிருப்பவர்களை தேர்வு செய்வதிலிருந்து அதன் பதவியாளர்களை தகுதியிறக்கம் செய்யாது இந்த சட்டத்தின்படி முடிந்தவரை ஏறத்தாழ 101 அலுவலகங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.
புதிய வாரியங்களை, சட்டங்களை, ஆணையங்களை, அதிகார அமைப்புகள் முதலி யவைகளை அமைத்து உருவாக்குவதன் நோக்கில் இந்த சட்டத்தின் இணைப்புப் பட்டியலில் காலத்துக்கு ஏற்ப திருத்தம் செய்யப்படுகிறது.
அந்த வாரியங்களின், சங்கங்களின், ஆணையங்களின் அதிகார அமைப்புகள் முதலியவற்றின் தலைவர், துணைத்தலைவர், மேலாண்மை இயக்குநரை தகுதி இறக்கம் செய்வதில் இருந்து நீக்குவது குறித்தும் அந்த நோக்கத்துக்காக மேற்சொன்ன சட்டத்தினை அடிக்கடி திருத்தம் செய்வதைத் தவிர்க்கும் பொருட்டும், பல வழிகளில் பயன்படுகிற கூறு சேர்க்கப்படலாம் என்று அரசு கருதுகிறது.
எனவே, அத்தகைய அலுவலகங்களின் பதவியில் உள்ளவர்களுக்கு விலக்களிப்பது குறித்தும் அவற்றுக்கு ஈட்டுப்படி தவிர பணி ஊதியம் வழங்கப்படமாட்டாது.
எனவே, இந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது என்று சட்டமுன்வடிவில் கூறப்பட்டிருந்தது.
முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த, 2014-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் (சேலம், திருச்சி, நெல்லை மாநகரங்களுக்கு நீட்டிப்பு) திருத்தச் சட்டமுன்வடிவு, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தாக்கல் செய்த, 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக சட்டத்தை
மேலும் திருத்துவதற்கான சட்டமுன்வடிவு, வருவாய்த் துறை அமைச்சர் பி.வி.ரமணா கொண்டு வந்த, 2014-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு, மறுகுடியமர்வு உரிமை சட்டமுன்வடிவு, கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தாக்கல் செய்த, 1989-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சட்டத்தை
மேலும் திருத்துவதற்கான சட்டமுன்வடிவு ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago