தீபா பேரவையில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக அதிருப்தியடைந்த வர்கள் ஓபிஎஸ் அணியில் சேரு வதைத் தடுக்க, தன்னை சந்திக்க சென்னைக்கு வருமாறு தீபாவின் கணவர் மாதவன் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அதிமுகவிலுள்ள ஒரு தரப்பினர் செயல்பட்டனர். தீபா பேரவைக்கு உறுப்பினர்களை அவர்கள் சேர்த்து வந்தனர். மாவட்டந்தோறும் பொறுப்பாளர் கள் நியமனத்தில், தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதாக கூறப்பட்டது.
பதவி கிடைக்காததால் அதி ருப்தியடைந்த பலர் ஓபிஎஸ் அணியில் இணையப் போவதாக தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக 3 அல்லது அதற்கு மேற் பட்ட எண்ணிக்கையில் போட்டி பொறுப்பாளர்களை மாதவன் நியமித்தார்.
குமரி மாவட்டத்தில் பொறுப் பாளராக செந்தில்முருகன் என்ப வரை தீபாவும், பிரின்ஸ், உதயன், பாபு ஆகியோரை மாதவனும் நியமித்துள்ளனர். இதனால், யார் தலைமையின்கீழ் இயங்குவது என தெரியாமல் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஓபிஎஸ் அணியில் சேர திட்டம்
மேலும், அதிருப்தியாளர்கள் ஓபிஎஸ் அணியில் சேர முடிவு செய்தனர். அவர்களைத் தக்க வைப்பதற்காக, மாவட்டந்தோறும் பொறுப்பாளர்களாக தான் அறி வித்த அனைவரையும் சென் னைக்கு வருமாறு மாதவன் அழைத்துள்ளார்.
தீபா பேரவை அதிருப்தியாளர் கள் கூறும்போது, ‘‘ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு ஓபிஎஸ் அணியினர் நாளை நடத்தும் உண்ணாவிரதத்துக்கு எங்களது ஆதரவை தெரிவித்து, அதில் பங்கேற்க முடிவு செய் தோம். மேலும், அவரது அணியில் சேரவும் திட்டமிட்டிருந்தோம்.
இந்நிலையில் எங்களை திடீரென செல்பேசியில் மாதவன் அழைத்தார். அணிமாறும் அவசர முடிவை எடுக்க வேண்டாம். அனைவரையும் மரியாதையுடன் நடத்துவோம் என தெரிவித்தார். இதனால் எங்களது முடிவை தற் காலிகமாக நிறுத்தி வைத்துள் ளோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago