சென்னையில் 7 இடங்களில் நவீன நடைபாதை- பணிகள் தீவிரம்; மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வசதி

By வி.சாரதா

மாற்றுத் திறனாளிகளும் உணரும் வகையில் புதிய வசதியுடன் சென்னையில் ஏழு இடங்களில் நவீன நடைபாதைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பாதசாரிகளும் மாற்றுத்திறனாளிகளும் இடையூறு இல்லாமல் பயன்படுத்தும் வகையில் 249 பேருந்து சாலைகளில் நவீன நடைபாதைகளை அமைக்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு திட்டமிட்டது. முதல்கட்டமாக 55 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் காவல்துறை ஆணையர் அலுவலகம் சாலை, வேனல்ஸ் சாலை, பாந்தியன் சாலை, கான்ரான் ஸ்மித் சாலை,கவிஞர் பாரதிதாசன் சாலை, டேங்க்பண்ட் சாலை (மகாலிங்கபுரம் பிரதான சாலை முதல் சுரங்கப்பாதை வரை), 70 அடி ஸ்கீம் சாலை (மகாலிங்கபுரம் பிரதான சாலை முதல் டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை வரை) ஆகிய ஏழு சாலைகளில் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

கிரானைட் தூண்கள்

மற்ற இடங்களில் இல்லாத சில புதிய அம்சங்கள் இந்த கிரானைட் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சியுடன் இணைந்து பணிபுரியும் ஐ.டி.டி.பி. நிறுவனத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் அத்வைத் கூறுகையில், “நடைபாதைகள் தற்போது 2 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படுவதால் அவற்றில் கார்களை நிறுத்துகின்றனர்.

இதைத் தடுக்க நடைபாதை ஓரங்களில் கிரானைட் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன சில இடங்களில் இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இனி சாலைகளின் அகலம் மாறாமலும் நடைபாதைகளின் அகலம் சாலைகளுக்கு ஏற்றவாறும் இருக்கும். இதனால் குறுகிய சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்” என்றார்.

ஒலி எதிரொலிப்பான்கள் (ரிப்ளெக்டர்ஸ்)

நடைபாதையின் ஓரங்களையும் சாலை முனையையும் பார்வையற்றோர் தங்களது கைத்தடிகளைக் கொண்டு தட்டி உணரும் வகையில், காவல்துறை ஆணையர் அலுவலக சாலையில் மஞ்சள் நிற ஒளி எதிரொலிப்பான்கள் சோதனை முறையில் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் அம்பா சலேல்கர் கூறுகையில், “கைத்தடிகளை கொண்டு தரையில் தட்டியபடி செல்லும்போது வித்தியாசமாக ஏதாவது தென்பட்டால் அது நடைபாதையின் முனை அல்லது நடுவில் ஏதோ கட்டிடத்தின் வாசல் உள்ளது என்று பார்வையற்றோரால் தெரிந்து கொள்ள முடியும்.

நடைபாதையின் சாம்பல் நிறத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட மஞ்சள் நிறத்தில் இவை அமைக்கப்படுவதால் பார்வை மங்கலாக இருப்பவர்களும் இதை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் ரிப்ளெக்டர்ஸைவிட, நடைபாதையிலே வேறுவிதமான கற்களை பொருத்துவதே மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருக்கும்” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏழு இடங்களில் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

சில இடங்களில் மின்சாரப் பெட்டிகள் அகற்றப்படாமல் இருப்பதால் பணிகள் தாமதமாகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்