சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 51 மீனவர்கள் நாடு திரும்பினர்

By செய்திப்பிரிவு

இலங்கை சிறையில் அடைக்கப் பட்டிருந்த 52 தமிழக மீனவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வியாழக்கிழமை நாடு திரும்பினர்.

இரு நாடுகளின் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இரு தரப்பிலும் மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள் ளனர். கடந்த 13-ம் தேதி இலங் கையின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஜெக தாபட்டினம் மீனவர்கள் 20 பேர், நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேர், காரைக்கால் மீனவர்கள் 22 பேர் என மொத்தம் 52 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இவர்கள் கடந்த அக். 16-ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள்.

விடுதலை செய்யப்பட்ட 52 மீனவர்களில், காரைக்கால் பட்டினச்சேரியைச் சேர்ந்த மீனவரும், விசைப் படகொன்றின் உரிமையாளருமான பொன்னு சாமி நெஞ்சுவலி காரணமாக யாழ்ப்பாணம் மருத்துவமனை யில் சேர்க்கப்பட் டார். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்காத அதிர்ச்சியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தாகக் கூறப்படுகிறது.

அவரைத் தவிர எஞ்சிய 51 பேரும் வியாழக்கிழமை பிற்பக லில் இரு நாட்டு கடல் எல்லையில் இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதே போல, இந்திய சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் 52 பேர் விடுதலை செய்யப்பட்டு, இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர், மீனவர்கள் 51 பேரும் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு காரைக்கால் தனியார் துறைமுகத்தை வந்தடைந்தனர். இந்திய கடற்படை கமாண்டர் உதல்சிங் உள்ளிட்டோர் மீனவர் களை அழைத்து வந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்