இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி சனிக்கிழமை நாகப்பட்டினத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். அவர்களது போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளது.
கடந்த டிச. 11-ல் நாகப்பட்டி னத்தைச் சேர்ந்த 110 மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 30 பேர் என 140 பேரை இலங்கை கடற்படையினர் ஒரே நேரத்தில் சிறைப்பிடித்தனர். இதனால் டிசம்பர் 12 முதல் நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக டிச.15 முதல் நாகப்பட்டினம் வட்டத்தைச் சேர்ந்த நாகூர், நாகூர் ஆரியநாட்டுத்தெரு, சாமந்தாம்பேட்டை, கல்லார், நாகை ஆரியநாட்டுத்தெரு உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டிச. 18-ல் நாகப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து நாகை மாவட்ட திமுக மீனவர் அணியினர் டிச. 20-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி நாகப்பட்டினத்தில் மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர். 8-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர். பேச்சுவார்த்தை தோல்வி உண்ணாவிரதம் இருந்த மீனவர்களிடம் போராட்டத்தை கைவிடக் கோரி நாகை ஆட்சியர் முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, கோட்டாட்சியர் சிவப்பிரியா ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது. காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago