திருநெல்வேலியில் 15 கனிம ஆலைகளுக்கு சீல்: மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

By அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் தாலுக்கா பகுதியில் செயல்பட்ட வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் 15 ஆலைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலி ஆட்சியர் என். கருணாகரன் நேற்று (வியாழக்கிழமை) கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தின் கரைசுற்றுபுதூர், நவலடி, புகரி உள்ளிட்ட 15 இடங்களில் செயல்பட்ட வி.வி.மினரல்ஸ் ஆலைகளை சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆலைகளாக தற்போது சீல் வைக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டிலிருந்தே கனிமவள ஆலைகள் செயல்படுவதற்கும், கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. சீல் வைக்கப்பட்டுள்ள ஆலைகளை 24 மணி நேரமுன் கண்காணிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்