ரூ.28 கோடி செலவில் சென்னையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டு வரும் தானியங்கி நகரும் நடை மேம்பாலப் (எஸ்கலேட்டர்) பணிகளில் தற்போது 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மார்ச் மாதத் துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் பாதசாரிகள் அதிகமாக செல்லும் இடங்களில் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள் எளிமையாக சாலையை கடந்து செல்ல வசதியாக 7 இடங்களில் தானியங்கி நகரும் நடை மேம்பாலம் (எஸ்கலேட்டர்) அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தது.
இதில், முதல்கட்டமாக குரோம்பேட்டை மருத்துவமனை, தாம்பரம் மெப்ஸ் ஆகிய இடங்களில் ஜி.எஸ்.டி சாலை யிலும், திருமங்கலம் - எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி சாலை சந்திப்பு, தரமணி இணைப்பு சாலையில் டி.சி.எஸ் அருகில், தரமணி இணைப்புச் சாலை - பெருங்குடி சாலை சந்திப்பு என மொத்தம் 5 இடங்களில் ரூ.28 கோடி செலவில் எஸ்கலேட்டர் வசதியுடன் மேம் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளுக்காக 2012-ம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மார்ச் மாதத்துக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு பாலங் கள் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் பாதசாரிகள் சாலைகளை கடந்து செல்ல வசதியாக சில இடங்களில் ஏற்கெனவே நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் மக்கள் படிகளில் ஏறி, இறங்க தயங்கினர். குறிப்பாக முதியோர், குழந்தைகள் படிகளில் ஏற பெரிதும் அவதிப்பட்டனர். இதனால், பெரும்பாலோர் இந்த நடை மேம்பாலங்களைப் பயன்படுத்துவதில்லை.
எனவே, மக்கள் எளிமையாக சாலையைக் கடந்து செல்லும் வகையில் பாதசாரிகள் அதிக முள்ள 5 இடங்களில் தானியங்கி நகரும் நடை மேம்பாலம் (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான சீனாவில் இருந்து மொத்தம் 10 எஸ்க லேட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் 2 தானியங்கி நகரும் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இரண்டும் ஏறிச் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இறங்கு வதற்கு படிகள் அல்லது சாய் தள வசதிகள் அமைக்கப்படும்.
எஸ்கலேட்டர் அமைக்கும் பணியில் 60 சதவீதம் முடிந்துள்ளன. வரும் மார்ச் இறுதிக்குள் ஒட்டுமொத்த பணி
களும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 10 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனமே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும். அதன்பிறகு அந்தப் பணியை நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக் கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago