மாநிலங்களவைத் தேர்தலில், திமுக சார்பில் திருச்சி என்.சிவா வேட்பாளராக நிறுத்தப்படுவதாக கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித் துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங் களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரலுடன் முடிகிறது. இதையடுத்து, இந்த 6 இடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், ஒருவர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஐந்து இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் தேமுதிக போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது.
கூட்டணிக்கு வருவதாக இருந்தால், தேமுதிகவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அக்கட்சி சார்பில் திருச்சி என்.சிவா வேட்பாளராக நிறுத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளி யாகியுள்ளதாகத் தெரிகிறது.
திமுக வேட்பாளருக்கு திமுக-23, மனிதநேய மக்கள் கட்சி- 2, புதிய தமிழகம்-2 என மொத்தம் 27 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. கடந்த
முறை மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அதுபோல இந்த முறையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் திமுகவுக்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் கேட்டபோது, ‘‘இந்த விஷயத்தில் உடனடியாக பதில் கூற முடியாது. கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, திமுக தரப்பில் ஆதரவு கேட்டனர். அதன்படி ஆதரவு அளித்தோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago