கர்நாடகத்தில் இருந்து தமிழகத் துக்கு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அறவே இல்லை. எனவே அச்சமின்றி கோழிக்கறி, முட்டை சாப்பிடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோழி, வாத்து, வான்கோழி போன்ற பறவைகளிடம் ‘ஏவியன் இன்ஃப்ளூன்ஸா’ (Avian Influenza) என்ற வைரஸ் மூலமாக பரவும் நோய் பறவைக் காய்ச்சல் எனப் படுகிறது. இதை கோழிகளின் பிளேக் நோய் என்கின்றனர். முதன்முதலாக இத்தாலியில் இந்நோய் பாதிப்பு 1878-ல் ஏற்பட்டது. பின்னர் பெல்ஜியம், ஸ்காட்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், பிரான்ஸ், இஸ்ரேல், பாகிஸ்தான் என உலகின் பல பகுதிகளையும் பறவைக் காய்ச்சல் கொள்ளை நோய் பாதித்துள்ளது. இந்தியாவில், 2005-06ல் தொடங்கி கடந்த ஆண்டு வரை பல மாநிலங் களிலும் இந்நோய் பரவியது.
இந்நோய் தாக்கிய கோழிகளைக் கையாளும் மனிதனுக்கும் நோய் பரவும் அபாயம் உண்டு. காற்றில் பரவக்கூடிய தன்மையுடைய பறவைக் காய்ச்சல் கோழிகளுக்கு வந்துவிட்டால் அந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து கோழிகளையும் மின்தகனம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், கோழிகள் மட்டு மல்லாமல் மனித இனத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்கிறது கால் நடை பராமரிப்புத் துறை.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் பறவைக் காய்ச்சல் வந்ததால், 3 லட்சம் கோழிகள் கடந்த மே 20-ம் தேதி மின்தகனம் செய்யப்பட்டன. இது அண்டை மாநிலங்களில் பறவை வளர்ப்போர், பண்ணை உரிமை யாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. கர்நாடகத்தில் 2.50 கோடி, ஆந்திரத்தில் 4 கோடி, தமிழகத்தில் 3 கோடி கோழிகள் உள்ளன. தமி ழகத்தில் 2 கோடி முட்டைக் கோழி கள், 1 கோடி கறிக்கோழிகள், 1 கோடி நாட்டுக் கோழிகள் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, கர் நாடகத்தில் இருந்து வரும் வாகனங் கள் மூலம் தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக எல்லையில் வாகனங் களுக்கு கிருமிநாசினி தெளிக்கப் படுகிறது. இதுபோல் கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலும் தெளிக்கப் படுகிறது.
பறவைக் காய்ச்சல் தடுப்பு நட வடிக்கை குறித்து சென்னை மாத வரத்தில் உள்ள கால்நடை நலக் கல்வி மைய இயக்குநர் பி.ஐ.கணே சன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அதன் ரத்த மாதிரியையும், பாதிக் கப்பட்ட உறுப்பையும் எடுத்து போபாலில் உள்ள தேசிய உயர்பாதுகாப்பு விலங்கின நோய் ஆய்வகத்துக்கு அனுப்புவோம். பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்று ஒரே நாளில் சொல்லிவிடுவார்கள்.
கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா?
தமிழகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறி எதுவும் இல்லை. இருப்பினும், மாதந்தோறும் சராசரியாக 20 சத வீத கோழிகளின் ரத்த மாதிரியை போபாலுக்கு அனுப்பி பரிசோ தித்து வருகிறோம்.
பழவேற்காடு, வேடந் தாங்கல், கரிகிரி, கரைவெட்டி, உதயமார்த்தாண்டபுரம், வடுவூர், கூந்தன்குளம், வெள்ளோடு, மேல்செல்வனூர்-கீழ் செல்வனூர், கஞ்சரான்குளம், வேட்டான்குடி ஆகிய பறவைகள் சரணாலயத் துக்கு இனவிருத்திக்காக வரும் வெளிநாட்டுப் பறவைகளின் எச்சத்தை அவ்வப்போது சேகரித்து அதையும் போபாலுக்கு அனுப்பி பரிசோதிக்கிறோம்.
கர்நாடகத்தில் பறவைக் காய்ச் சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கோழிக்கறி, முட்டை சாப்பிட்டால் நோய் தாக்கும் என்று அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் அறவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பறவைக் காய்ச்சல் தாக்கினால் கழுத்து வீங்கும், மூச்சு திணறும்
பறவைக் காய்ச்சலுக்கு என சில அறிகுறிகள் உள்ளன. இந்நோய் வந்துவிட்டால் கோழிகள் தீனி சாப்பிடாது. எடை குறையும். முட்டைக் கோழிகள் முட்டை போடாது. இருமல் இருக்கும். மூக்கு ஒழுகும். மூச்சுத் திணறல் ஏற்படும். கண்ணில் நீர் வடியும். நோய் பாதித்த கோழிகள் மற்றவையுடன் சேராமல் தனித்து இருக்கும். கழுத்து, கண், காது, தலையில் வீக்கம் காணப்படும். இறகுகள் சிலிர்த்த நிலையில், வயிற்றுப் போக்கு இருக்கும். நரம்பு மண்டலம் பாதித்து வலிப்பு வரும். இந்த அறிகுறிகள் எதுவுமே இல்லாமல்கூட திடீரென ஆயிரக்கணக்கான கோழிகள் இறக்கும் அபாயமும் உண்டு என்கிறார் கால்நடை நலக் கல்வி மைய இயக்குநர் பி.ஐ.கணேசன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago