40 தொகுதிக்கும் வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு; கம்யூனிஸ்ட்களுடன் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை

By செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா, தனது 66-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பகல்12.30 மணிக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

தொகுதி

வேட்பாளர்

தற்போது

1. திருவள்ளூர் (தனி)

டாக்டர் பி.வேணுகோபால்

அதிமுக மருத்துவ அணிச்செயலாளர்

2. வடசென்னை

டி.ஜி.வெங்கடேஷ்பாபு

வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர்

3. தென்சென்னை

டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்

தெற்கு லீத் கேஸில் தெரு, ராஜா அண்ணாமலைபுரம்

4. மத்திய சென்னை

எஸ்.ஆர்.விஜயகுமார்

அதிமுக மாணவர் அணி செயலாளர்

5. ஸ்ரீபெரும்புதூர்

கே.என்.ராமச்சந்திரன்

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அவைத் தலைவர்

6. காஞ்சிபுரம் (தனி)

மரகதம் குமாரவேல்

திருப்போரூர் ஒன்றிய இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர்

7. அரக்கோணம்

திருத்தணி கோ.அரி

திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

8. வேலூர்

பா.செங்குட்டுவன்

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்

9. கிருஷ்ணகிரி

கே.அசோக்குமார்

கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர்

10. தருமபுரி

பி.எஸ்.மோகன்

தருமபுரி வழக்கறிஞர் பிரிவு செயலாளர்

11. திருவண்ணாமலை

ஆர்.வனரோஜா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்

12. ஆரணி

செஞ்சி சேவல் வெ.ஏழுமலை

விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

13. விழுப்புரம் (தனி)

எஸ்.ராஜேந்திரன்

விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப்பிரிவுச் செயலாளர்

14. கள்ளக்குறிச்சி

டாக்டர் க.காமராஜ்

விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்

15. சேலம்

வி.பன்னீர் செல்வம்

சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்

16. நாமக்கல்

பி.ஆர். சுந்தரம்

நாமக்கல் மாவட்ட அவைத் தலைவர்

17. ஈரோடு

எஸ்.செல்வகுமார சின்னையன்

ஈரோடு மாநகர மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்

18. திருப்பூர்

வி.சத்தியபாமா

தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்

19. நீலகிரி (தனி)

டாக்டர் சி.கோபாலகிருஷ்ணன்

குன்னூர் நகரமன்றத் தலைவர்

20. கோவை

ஏ.பி.நாகராஜன்

கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர்

21. பொள்ளாச்சி

சி.மகேந்திரன்

திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்

22. திண்டுக்கல்

எம்.உதயகுமார்

நிலக்கோட்டை பேரூராட்சி செயலாளர்

23. கரூர்

டாக்டர் மு.தம்பிதுரை

அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்

24. திருச்சி

ப.குமார்

இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர்

25. பெரம்பலூர்

ஆர்.பி.மருதைராஜ் என்ற மருதராஜா

பெரம்பலூர் ஒன்றிய செயலாளர்

26. கடலூர்

ஆ.அருண் மொழித்தேவன்

கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர்

27. சிதம்பரம் (தனி)

மா.சந்திரகாசி

பெரம்பலூர் விவசாய பிரிவுச் செயலாளர்

28. மயிலாடுதுறை

ஆர்.கே.பாரதிமோகன்

திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர்

29. நாகப்பட்டினம் (தனி)

டாக்டர் கே.கோபால்

திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்

30. தஞ்சை

கு.பரசுராமன்

தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்

31. சிவகங்கை

பி.ஆர்.செந்தில்நாதன்

சிவகங்கை மாவட்டச்செயலாளர்

32. மதுரை

இரா.கோபாலகிருஷ்ணன்

மதுரை மாநகராட்சி துணை மேயர்

33. தேனி

ஆர்.பார்த்திபன்

தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்

34. விருதுநகர்

டி.ராதாகிருஷ்ணன்

விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர்

35. ராமநாதபுரம்

அ.அன்வர் ராஜா

அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்

36. தூத்துக்குடி

ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி

தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்

37. தென்காசி (தனி)

வசந்தி முருகேசன்

நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளர்

38. நெல்லை

கே.ஆர்.பி.பிரபாகரன்

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிச் செயலாளர்

39. கன்னியாகுமரி

டி.ஜாண் தங்கம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர்

40. புதுச்சேரி

எம்.வி.ஓமலிங்கம்

காரைக்கால் மாவட்டச் செயலாளர்



கம்யூனிஸ்ட்களுடன் பேச்சு:

தொடர்ந்து நிருபர்களிடம் முதல்வர் கூறுகையில், ‘‘இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு பற்றி பேசப்பட்டு வருகிறது. தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றார்.

வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் முதல்வர் ஜெயலலிதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்