தமிழகத்திலும் ஒரு நாள் பாஜக அரசு மலரும் என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் வெள்ளிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், "மஹாராஷ்டிரா மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மை வென்றிருப்பது இந்தியாவில் மக்கள் பாஜக அரசை விரும்புகின்றனர் என்பதை காட்டுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். நாட்டில் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் பாஜக அரசு மலரும்.
உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அங்கு எதிர்கட்சிகள் மோடியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கின்றனர். இதனை எதிர்கட்சிகள் கைவிட வேண்டும்.
இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறது. ஒரு காலத்தில் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. ஆனால் அண்மையில் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள் பறக்கவிட்டதில் 90 செயற்கைகோள்கள் அமெரிக்கா உடையது. இது இந்தியா வளர்ச்சி பெற்றிருப்பதை காட்டுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது தொடர்பாக தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. இருப்பினும தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை மட்டுமே மோடி அரசாங்கம் செய்து வருகிறது" என்றார். இந்த சந்திப்பின்போது,
மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிராமன், செயலர் ஹரிகரன் ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago