ராமநாதபுரம், திருப்புல்லாணி அருகே கோயிலில் 5 கழுமரங்கள்: இன்றும் உயிர்ப்புடன் தொடரும் வழிபாடு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல் லாணி அருகே பள்ளபச்சேரியில் ஒரே கோயிலில் 5 கழுமரங்கள் கழுவேற்றப்பட்ட வீரர்களின் நினை வாக இன்றும் உயிர்ப்புடன் தொடர்ந்து வழிபாட்டில் உள்ளன.

கழுவேற்றம் என்பது கொடூர மான தண்டனையாக முற்காலத் தில் இருந்துள்ளது. மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்ட கூர்முனை யுள்ள கழுவில் எண்ணெய் தேய்த்து வழுவழுப்பாக்கி வைத்திருப்பர். கழுவேற்ற வேண்டியவர்கள் ஆசன வாயில் இந்த கூர்முனையை சொருகி அதில் அமர்த்தி பிணைத்து விடுவர். ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதிகளில் அமைக்கப் படும் கழுவில் ஏற்றப்பட்டவர்கள், பல நாட்கள் துடித்து உயிரை விடுவர். அவர்களின் சடலம் விலங்குகள், பறவைகளுக்கு இரையாக்கப்படும். அரசை எதிர்ப்பவர்கள், திருடர் களுக்கு இதுபோன்ற கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கழுமர வழிபாடு

கழுவேற்றப்பட்டவர்களின் உயிர் அந்தக் கழுமரங்களில் உறைந்து தெய்வத்தன்மை அடை வதாக மக்கள் நம்புவதால், கழு மரங்களை காலங்காலமாக வழி பட்டு வருகிறார்கள். பெரும்பா லும் கழுவேற்றப்பட்ட வீரர்களையே வழிபடுகிறார்கள்.

கழுவேற்றம் நடந்ததன் நினை வாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கல்லால் செதுக்கப் பட்ட கழுமரங்களை வணங்கி வரு கிறார்கள். மரம், இரும்பால் ஆன பழமையான கழுமரங்கள் அழிந்த நிலையில், கல்லால் செதுக்கப்பட்ட கழுமரங்களை புதிதாக உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள். இத் தகைய கல் கழுமரங்களின் கீழ், அதில் உயிர் விட்டவர்களின் சிற்பங்களை செதுக்கியுள்ளனர். சில இடங்களில் கழுமரங்களே கருவறை தெய்வமாக உள்ளன. இவ்வகை வழிபாடுகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், திருப் புல்லாணி அருகே பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் 5 கழு மரங்கள் உள்ளன. ஒரே கோயி லில் இத்தனை கழுமரங்கள் காணப் படுவது இங்கு மட்டுமே.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது:

திருப்புல்லாணியில் இருந்து கமுதி வழியாக மதுரை செல் லும் வழித்தடத்தில் அதிக அளவில் கழுமரங்கள் உள்ளன. உத்தரகோச மங்கை அருகே கண்ணன்குடி, கோவிந்தனேந்தல், கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஆகிய ஊர் களில் உள்ள கோயில்களில் தலா 3 கழுமரங்கள் உள்ளன. களரியில் கழுமரம் கருவறை தெய்வமாக வணங்கப்படுகிறது.

ராமநாதபுரம் அருகே கழுவன் பொட்டல் மற்றும் பள்ளபச்சேரி உள்ளது. பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் உள்ள கழுமரங்களில் தெற்கத்தி முனியசாமி, கோவிந்தன், ஊர்வலசாமி, கருப்பணன், நொண்டிக்கருப்பணன் ஆகியோ ரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள் ளன. இரு கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தி காட்சி அளிப்பதால் இவர்கள் போர் வீரர்களாக இருந்திருக்கலாம்.

கழுமரங்களின் நடுவே இராக்கச்சியம்மன், இருளாயி, காளி ஆகிய பொம்மடி தெய்வங் கள் உள்ளன. இங்கு பெண் தெய்வங்களுக்கு கோழியையும், ஆண் தெய்வங்களுக்கு ஆடுகளை யும் பலி கொடுக்கிறார்கள். அவித்த தட்டைப்பயறு, கருப்பட்டி, தேங் காய், வாழைப்பழம், பச்சரிசி, பலகாரம் ஆகியவற்றை படையல் இட்டும் வணங்குகிறார்கள்.

இந்த கழுமரங்களில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 கல்வெட்டுகளில், இக்கோயிலை வழிபடும் கோடாங்கி மகன் உடை யான், இராக்கன் மகன் கருப்பணன் சாத்தார் ஆகிய 2 வகையறாக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இராக்கச்சியம்மனை வணங்கும் போது “கட்டுச்சோறு கட்டி கனத்த வழி போறோம்” என்று சொல்லி கோயிலைச் சுற்றி வருகிறார்கள். இதன்மூலம் இவ்வூரில் இருப்ப வர்கள் இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளதை அறிய முடிகிறது.

மதுரையுடன் தொடர்பு

மதுரையில் சமணர்களை கழு வேற்றினர் என பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழுமர வழிபாடு பாண்டியநாடு முழுவதும் பல இடங்களில் காணப்பட்டாலும், இதற்கான காரணங்கள் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறாக உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்