நட்பு மற்றும் டேட்டிங்குக்கு அணுகச் சொல்லி அனுப்பப் படும் குறுஞ்செய்திகள் வாடிக்கை யாளர்களை முகம் சுளிக்க வைத் துள்ளன. இதனை தடுக்க ட்ராய் அமைப்பு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செல்போன்களை பயன்படுத் தும் வாடிக்கையாளர்களுக்கு சேவை குறுஞ்செய்திகளை அனுப் பும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதற்கெதிராக வாடிக் கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) ‘தொல்லை செய்யாதே’ (டு நாட் டிஸ்டர்ப்) சேவையை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இதையும் மீறி போலி யான குறுஞ்செய்திகள் அனுப்பப் படுகின்றன. இதில் அடுத்த கட்டமாக நட்பு மற்றும் டேட்டிங் குக்காக ஆட்களை அனுப்புகி றோம் என்று தெரிவிக்கும் குறுஞ் செய்திகள் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
சில வெளிநாட்டு சாதனங்களின் உதவியோடு தற்காலிக சர்வர் களை கொண்டும் இப்படிப் பட்ட குறுஞ்செய்திகள் அனுப்பப் படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுபற்றி ட்ராய் அமைப்புக் கான ஆலோசகர் ஒருவரிடம் கேட்டபோது, “இந்த மாதிரியான குறுஞ்செய்திகளை ட்ராய் ஒரு போதும் அனுமதிக்காது. இது தொடர்பாக அந்தந்த செல்போன் நெட்வொர்க் சேவை நிறுவனங் களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேவையற்ற குறுஞ் செய்திகளை தவிர்க்கத்தான் ‘டு நாட் டிஸ்டர்ப்’ சேவையை ட்ராய் அறிமுகப்படுத்தியது.
இதை மீறி தனியாக சர்வர்களை வைத்து குறுஞ்செய்திகள் அனுப்பு வதை தடுக்க தனியார் நெட் வொர்க் நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று 2012-ம் ஆண்டு முதலே அறி வுறுத்தி வருகிறோம்” என்றார்.
இப்பிரச்சினை பற்றி சில தனியார் செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரி கள் கூறியதாவது:
இந்த குறுஞ்செய்திகள் மொபைல் நெட்வொர்க்கின் மூலம் மூன்றாம் நபர்களால் அனுப்பப் படுகின்றன. இதில் ஊடகமாகத் தான் நாங்கள் இருக்கிறோம். அதே வேளையில் இதனை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை. இதை தடுக்கத்தான் ‘டு நாட் டிஸ்டர்ப்’ சேவை உள்ளது.
இவற்றை தவிர்க்க ‘START’ என டைப் செய்து கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘0’ என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். சில வெளி சர்வர்களின் குறுக்கீடுகளை தவிர்க்கவும் போதிய அளவு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
இந்த பிரச்சினை பற்றி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அஜீதாவி டம் கேட்டபோது, “இது சட்டத் துக்கு புறம்பானதாகும். தெருவில் போகும் ஒருவரை பாலியல் தொழிலாளி அழைப்பது எப்படி தவறோ, அதுபோல செல்போனில் இப்படி குறுஞ்செய்திகளை அனுப்பு வதும் தவறாகும். டேட்டிங்குக்காக ஆள் அனுப்புகிறேன் என்று செய்தி அனுப்புபவரால் எத்தனை பெண்களின் வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கும் என்பதை உணர்ந்து, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago