ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6 கோடியில் மணிமண்டபம்: 2.7 ஏக்கரில் சுற்றுலாத் துறை அமைக்கிறது

By பெ.ஜேம்ஸ்குமார்

ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு, ஸ்ரீபெரும் புதூரில் 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.

வைணவத்தின் அருமை பெரு மைகளை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரப்பிய ஸ்ரீ ராமானுஜர் கி.பி.1017-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். 120 வயது வரை வாழ்ந்த அவர், சமய மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். அவரது மனித நேய பண்புகள், கொள்கை, கோட்பாடுகளை அனைத்து தரப்பினரும் போற்றி பாராட்டி ஏற்றுக் கொண்டனர். இதனால் வேற்று மதத்தினரும் வைணவத்தை தழுவினர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேச வப்பெருமாள் கோயிலில் ராமா னுஜரின் உருவம் தாங்கிய செப்பு விக்ரகம் ஒன்றை அவரது சீடர்கள் உருவாக்கினர். அது, தானுகந்த திருமேனி என அழைக்கப்படுகிறது. அத்திருமேனி, பல நூறு ஆண்டுகளாக இந்த கோயிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஆயிர மாவது ஆண்டு அவதார திருநட் சத்திர விழா, ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை வெகு விமரிசையாக இந்த கோயிலில் கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சொற்பொழிவு, கருத்தரங்கம், கண்காட்சி, நாட் காட்டி, புத்தக வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராமானுஜர் அவ தரித்த ஸ்ரீ பெரும்புதூரில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் மணிமண்டபம் கட்டப்படவுள்ளது. இதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மண்டபம் கட்ட ஆதி கேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலமும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழக சுற்றுலாத் துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பில் மணி மண்டபம் கட்டப்பட வுள்ளது.

இந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் குறித்த வரலாற்று தகவல் மற்றும் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. சுற்றுலாத் துறை சார்பில் விரை வில் மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கும் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்