மனிதக் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு: இந்தியாவில் முதல்முறையாக உதகையில் தொடக்கம்

By ஆர்.டி.சிவசங்கர்

இந்தியாவிலேயே முதல்முறையாக உதகையில் மனிதக் கழிவில் இருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை 1 டன் இயற்கை உரம் தயாரிக்கப் படுகிறது.

திறந்தவெளியில் மலம் கழிப் பதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் தமிழக அளவில் 2-வது இடத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை நீரால் மனிதக் கழிவு அடித்துச் செல்லப்பட்டு நீரோடைகள், ஆறுகள் மாசடைகின்றன. இந்நீரை பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். முறை யான கழிப்பறை வசதி இல்லாத தால் இளம் பெண்களும் பாதிக்கப் படுகின்றனர். இதனால் 23 சதவீத பெண்கள் பள்ளிப்படிப்பையே பாதியில் நிறுத்தியுள்ளனர் என கிராமிய அபிவிருத்தி இயக்கம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு, இயற்கை உபாதை யைக் கழிக்க இரவு நேரங்களில் மக்கள் வெளிப்புறங்களில் செல்லும் போது, விலங்குகளினாலும் பேராபத்து ஏற்படுகிறது.

38,200 கழிப்பறைகள்

உதகை அருகே உள்ள அருவங்காடு கிராமிய அபிவிருத்தி இயக்கம் கழிப்பிடம் கட்டும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் கழிப்பிடங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 38,200 கழிப்பறைகள் கட்டப் பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் 1.2 லட்சம் பேர் முதல்முறை யாக கழிப்பறையை பயன்படுத்து கின்றனர். கழிப்பிடங்களை மக்கள் பயன்படுத்துகிறார்களா? எனவும் கண்காணிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியா விலேயே முதல்முறையாக மனிதக் கழிவில் இருந்து உரம் தயாரிப்புக் கூடம் உதகை அருகே சாம்ராஜ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருவங்காடு கிராமிய அபிவிருத்தி இயக்க நிறுவனர் என்.கே.பெருமாள் கூறியதாவது:

மனிதக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரம் முதல் தரம் வாய்ந்தது. செப்டிக் டேங்க்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவைச் சிலர் நீராதாரங்கள் மற்றும் வனத்தில் கொட்டிச் சென்றுவிடு கின்றனர்.

இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு, கழிப்பிடம் கட்டும் திட்டத்தின் நோக்கமே சீர்குலைந்துவிடுகிறது. இதனால், எங்கள் இயக்கத்தின் சார்பில், சாம்ராஜ் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் 36 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உரம் தயாரிப்புக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

வெயிலான காலநிலையில் 15 நாட்களில் உரம் தயாராகிவிடும். 15 நாட்களுக்கு ஒருமுறை 1 டன் இயற்கை உரம் தயாரிக்கப்படும். மழைக் காலங்களில் உரம் தயாரிக்க 3 மாத காலமாகும். இந்த உரம், ‘ஆர்கானிக்’ தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். இத்திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் செயல்படுகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்