பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 3 வேளையும் தரமான உணவு

அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 3 வேளையும் தரமான உணவு மற்றும் டீ, காபி, பால் வழங்கப்படும் என மருத்துவமனை சிறப்பு அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை கடந்த 21-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த மருத்து வமனையில் இதயம், இதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், மயக்கவியல், ரத்த நாளம் என மொத்தம் 9 சிறப்பு துறைகள் செயல்படுகின்றன. மற்ற அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 400 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பன்னோக்கு மருத்துவமனை சிறப்பு அதிகாரி ரமேஷ் கூறியதாவது: ஏழை, எளிய மக்களுக்கு தரமான உயர் சிகிச்சை அளிக் கவே, இந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ மனையில் தற்போது 400 படுக்கை கள் உள்ளன. விரைவில், 500 படுக்கைகளாக உயர்த்துவோம். தனியார் மருத்துவமனையில் வழங்கப்படுவதுபோல, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் 3 வேளையும் தரமான உணவு, அவர்களின் படுக்கைக்கே சென்று வழங்கப்படும். மேலும் டீ, காபி, பால் கொடுக்கப்படும்.

நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாப்பிடுவதற்காக கீழ் தளத்தில் தமிழ்நாடு ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் சாப்பிடுவதற்காக 3-வது தளத்தில் கேன்டீன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை வளாகத் துக்குள் பிளாஸ்டிக் பை, கவர் கொண்டுவர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட் களை பிளாஸ்டிக் கவர்க ளில் எடுத்து வருவதைத் தவிர்த்து, பாத்திரங்களில் எடுத்து வரலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE