வெடி பொருள்கள் பறிமுதல் வழக்கு: கிச்சான் புகாரி கூட்டாளி கைது

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மேலப்பாளை யத்தில், வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிச்சான் புகாரியின் கூட்டாளி பறவை பாதுஷாவை (23) கேரளத்தில் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை அருகே பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி யான திருநெல்வேலி மேலப்பா ளையத்தைச் சேர்ந்த பறவை பாதுஷா என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தேடி வந்தனர். கடந்த 2 ஆண்டாக அவர் தலைமறை வாக இருந்தார்.

இதுபோல் மேலப்பாளை யத்தில் வெடிப்பொருள்களை பதுக்கியது, பெங்களூரு குண்டு வெடிப்புக்கு, வெடிபொருள் விநியோகம் செய்தது, வேலூர் இந்து முன்னணி பிரமுகர் கொலையில் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறவை பாதுஷாவுக்கு தொடர்பு இருந்தது.

அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் உள்ளன. ‘பறவை பாதுஷா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என்று போலீஸார் அண்மையில் அறிவித்திருந்தனர்.

மேலப்பாளையத்தில் கடந் தாண்டு ஜூலை 27-ம் தேதி சிறப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த போலீஸார் சாகுல் ஹமீது மற்றும் அவரது கூட்டாளி முகமது தாசிம் ஆகியோரை பிடித்தனர். விசாரணையில், மேலப்பாளையத்திலுள்ள ஒரு வீட்டில் வெடிமருந்து பொருள்கள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தததும், மேலப் பாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பிஸ்மி, நூருல் அகமது, முகமது சம்சுதீன் ஆகியோர் அவற்றை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது.

போலீஸார் மேலப்பாளை யத்தில் அல்பாத் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, 145 எலக்ட்ரிக் டெட்டனேட் டர்கள், 17.50 கிலோ வெடிமருந்து பொருள் களை கைப்பற்றினர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், தடை செய்யப்பட்ட அல்உம்மா இயக்க ஆதரவாளரான மேலப்பாளை யத்தைச் சேர்ந்த கிச்சான்புகாரி, அவரது கூட்டாளி பறவை பாதுஷா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

பறவை பாதுஷாவை போலீஸார் பல்வேறு இடங் களிலும் தேடி வந்தனர். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்தது. சி.பி.சி.ஐ.டி. பிரிவு தனிப்படை போலீஸார் அங்கு முகாமிட்டு கண்காணித்தனர். சனிக்கிழமை இரவு கொல்லம் மாவட்டம், அஞ்சல் என்ற இடத்தில் தனிப்படை போலீஸார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். .

ஞாயிற்றுக்கிழமை மாலை அவரை போலீஸார் திருநெல் வேலிக்கு அழைத்து வந்தனர். மேலப்பாளையத்தில் வெடிப் பொருள்கள் பறிமுதல் செய்யப் பட்ட வழக்கில் அவரை பாளையங் கோட்டை 1-வது நீதித்துறை நடுவர் ராமலிங்கம் வீட்டுக்கு அழைத்துச் சென்று நீதிபதிமுன் ஆஜர்படுத்தினர்.

அப்போது, பறவை பாதுஷாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கேட்டனர். ஆனால், உடனடியாக காவலில் எடுக்க அனுமதி மறுத்த மாஜிஸ்திரேட் ராமலிங்கம், ஒரு நாள் நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். திங்கள்கிழமை (இன்று) மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனு மீது அப்போது முடிவு செய்வதாகவும் மாஜிஸ்திரேட் ராமலிங்கம் தெரி வித்தார்.

இதையடுத்து, பலத்த பாதுகாப் புடன் பாளையங் கோட்டை மத்திய சிறையில் பறவை பாதுஷா அடைக்கப்பட்டார். ஏற்கெனவே மேலப்பாளையம் வெடிப் பொருள்கள் பறிமுதல் வழக்கில் திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில், குற்றவாளிகளாக 15 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். கிச்சான் புகாரி 14-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

‘பறவை’ வந்தது எப்படி?

‘பறவை’ பாதுஷா தனது பெயரில், ‘பறவை’ என்ற அடைமொழி இருப்பது குறித்து அவரது சொந்த ஊரான மேலப்பாளையம் பகுதியில் விசாரித்த போது, ப, பா என்று எதுகை மோனையுடன் தனது பெயரை அவராகவே அமைத்து கொண்டதாக தெரியவந்தது. வழக்குகளில் தொடர்புடைய பலரது பெயர்களுக்குமுன் அடைமொழியை சேர்த்திருப்பது போல்தான் இதுவும். ஆனாலும், சிலரது வேகத்தை பார்த்து, ‘பறக்கிறான்’ என்று கூறுவதைப்போல், பாதுஷாவும் தனது செயல்பாடுகளில் இயல்பாகவே வேகம் காட்டுவார். அதனால்கூட அவரது பெயரில், ‘பறவை’ ஒட்டியிருக்கலாம் என்று மற்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது.

‘கிச்சான்’ புகாரி யார்?

பெங்களூரு குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் கிச்சான் புகாரி திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்தவர். தடை செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத்தை சேர்ந்த இவர் மீது அடுத்தடுத்து 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பறவை பாதுஷா போன்று, ‘புகாரி’ என்ற தனது சொந்த பெயருக்குமுன் கிச்சான் என்ற பட்டப்பெயரையும் இவர் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்