பழுதான நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி: மின்வெட்டை நீக்கியது வாரியம்

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் மின் வெட்டு அமலானது. கடந்த 20ம் தேதி ஒரு மணி நேரமாகத் தொடங்கி 21ம் தேதி இரண்டு மணி நேரமாகி, 22ம் தேதி ஐந்து மணி நேரமானது. இதுகுறித்து, மின் துறை அதிகாரிகள் கூறும்போது துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு, மின் நிலையங்களின் கோளாறுகளை திங்கள் மாலையில் சரி செய்தனர். திங்கள் மாலை ஏழு மணி நிலவரப்படி, 12, 240 மெகாவாட் அதிகபட்சமாக உற்பத்தி செய்யப்பட்டது.

பழுதான மின் நிலையங்கள் வடசென்னை புதிய நிலையத்தின் இரண்டாம் அலகு (600 மெகாவாட்), எண்ணூர் இரண்டாம் அலகு (60 மெகாவாட்), தூத்துக்குடி முதல் அலகு (210 மெகாவாட்) நிலையங்களில் உற்பத்தி தொடங்கியதாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடசென்னை மற்றும் வள்ளூர் புதிய மின் நிலையங்களில் மட்டும் 2090 மெகாவாட் உற்பத்தியானதாகவும் மேட்டூர் நிலையத்தில் வரும் 27ம் தேதிக்குள் பழுது சரி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE