மண்டபம் மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை சிறைபிடித்துச் சென்றனர்.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதும், வலைகளை அறுத்து எறிவதும், படகுகளைச் சேதப்படுத்துவதும் தொடர் கதையாக உள்ளது.
கடந்த 29-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சார்ந்த 22 மீனவர்களையும், கடந்த 30-ம் தேதி பாம்பனைச் சார்ந்த 18 நாட்டுப் படகு மீனவர்களையும் பிடித்துச் சென்றுள்ளனர்.
இந்தப் பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் மண்டபத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங் கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மண்டபம் தென்கடல் பகுதி யைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 26 மீனவர்களை சிறைபிடித்து 5 படகுகளையும் கைப்பற்றினர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கல்பிட்டி கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
முன்னதாக தமிழக மீனவர்கள் 256 பேர் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் 81 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்குள் 3-வது தடவையாக இலங்கை கடற் படையினர், தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது தமிழக மீனவர்களை கவலையடையச் செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago