சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில்: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இது கோழைத்தனமானது.
விரக்தியில் சில கோழைகள் இவ்வாறு செய்துள்ளனர். இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை குறிவைத்து நடத்தப்படும் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாருக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறார்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago