மீனவர் பிரிட்ஜோ கொலை தொடர்பாக இதுவரை 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அணமையில், இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து மீனவரின் உடலை வாங்காமல் ராமநாதபுரத்தில் மீனவர்கள் ஒரு வாரம் போராட்டம் நடத்தினர். பின்னர் மத்திய அரசு உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு மீனவர் ப்ரிட்ஜோவின் உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரர் யார் என்பதை கண்டுபிடித்து அவரை இந்தியா கொண்டுவந்து தண்டிக்கக்கோரி ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரைச் சேர்ந்த டி.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு வழங்குவதில்லை.
இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு மீது மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள கடல் பரப்பில் குமரி மீனவர்கள் இருவரை இத்தாலி வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அந்த இரு வீரர்களையும் கேரள போலீஸார் கைது செய்தனர். கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியது. ஆனால் பிரிட்ஜோ குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியது. மத்திய அரசு இழப்பீடு வழங்க வில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய 8 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் எம்.கோவிந்தன் வாதிடும்போது, பிரிட்ஜோ கொலை தொடர்பாக இதுவரை 17 பேரிடம் விசாரித்துள்ளோம். அடையாளம் தெரியாத இலங்கை கடற்படை வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்ஜோ சென்ற படகில் பயன்படுத்தப்பட்ட ஜிபிஎஸ் (குளோபல் பொசசனிங் சிஸ்டம்) கருவி சென்னை ஐஐடிக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், ஜிபிஎஸ் கருவி ஆய்வுக்கு அனுப்பப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago