தமிழகத்தில் 2004-ம் ஆண்டில் சுமார் 900 பெண்கள் காவல்துறை யில் நேரடி உதவி ஆய்வாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு உதவி ஆய்வாளர் களாக பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறையில் 10 ஆண்டுகள் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வர்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இவர்கள் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகளைக் கடந் தும் இதுவரை இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கவில்லை.
அதே நேரத்தில், இவர்களுடன் பணிக்கு தேர்வாகி உடல்நிலை காரணமாக உடனடியாக பணியில் சேராமல் ஓர் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில காவல் நிலையங்களில் ஒரே நேரத்தில் பணிக்கு தேர்வாகி தாமதமாக பணியில் சேர்ந்த ஜூனியர் இன்ஸ்பெக்டராகவும், சீனியர் உதவி ஆய்வாளராகவும் இருக்கின் றனர். தென் மாவட்டங்களில் தங்களின் ஜூனியருக்கு கீழ் உதவி ஆய்வாளராக பணிபுரிய விரும்பாமல் 14-க்கும் மேற்பட்ட பெண் உதவி ஆய்வாளர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு இடமாறு தல் வாங்கிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் 1,022 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் முடிந்திருப்பதால் எங்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்க வேண்டும். நாங்கள் கடந்த 12 ஆண்டுகளாக சட்டம், ஒழுங்கு பணி, காவல் நிலைய நிர்வாகம் போன்ற பணிகளை திறம்பட செய்து வருகிறோம்.
எங்களுடன் தேர்வாகி, ஓர் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்த வர்கள், அவர்களை எங்கள் குழு வாக கருதக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்க ளுக்கு மட்டும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது பணியில் மூத்தவர்களான எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அதிமுக ஆட்சியில்தான் நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். தற்போதைய அதிமுக ஆட்சியில் தாமதிக்காமல் எங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார்.
இதுபற்றி, உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ஒட்டுமொத்த மாக பதவி உயர்வு வழங்கினால், நிதிச் சுமை அதிகரிக்கும். இது தொடர்பாக, அரசுதான் முடி வெடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago