அதிமுக ஆட்சியில் சிமெண்ட் விலை 2 மடங்கு உயர்வு: கருணாநிதி
இதுதொடர்பாக கேள்வி-பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. ஆட்சியில் சிமெண்ட் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டதே? சிமெண்ட் விலை குறைந்து விட்டால், அது இந்த ஆட்சிக்கு ஒரு "குறைவாக"த் தெரியும் என்று நினைக்க மாட்டார்களா?
ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.370-க்கு விற்கிறதாம். கடந்த 2007ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.180 ஆக இருந்தபோது, அதற்கே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஆட்சியில் தற்போது சிமெண்ட் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
மணல் விலையும் அதிகரிப்பு கடந்த 2008-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் சிமெண்ட் விலை அதிகமாக இருந்தபோது, சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் சிமெண்ட் ஆலைகள் அரசுடைமையாக்கப்படும் என்று எச்சரித்தேன்.
ஒரு மூட்டை சிமெண்ட் 270 ரூபாய் விற்றபோதே கண்டன அறிக்கை விடுத்த ஜெயலலிதா, தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாய் விலைக்கு விற்கிறதே, அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
சிமெண்ட் விலை இருக்கட்டும்; மணல் விலை பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. சென்னையில் ஒரு லாரி மணல் ரூ.16 ஆயிரத்து 500 முதல் ரூ.17 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.