தெலங்கானா போல தமிழகத்தில் வெளிப்படையாக நடக்குமா மணல் விற்பனை?- கட்டுநர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

By டி.செல்வகுமார்

தெலங்கானாவில் மணல் விற்பனை ஆன்லைன் மூலம் வெளிப்படை யாக நடப்பதால் நியாயமான விலையில், தட்டுப்பாடின்றி மணல் கிடைக்கிறது.

கடத்தல் போன்ற முறைகேடுகளும் தடுக்கப்படு கிறது. அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது. இந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்றுமா என்று கட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் மணல் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. மணல் தட்டுப்பாட்டால் கட்டுமா னத் தொழில் முற்றிலுமாக முடங்கி யுள்ளது. இந்நிலையில், மணல் விற்பனையை அரசே நேரடியாக மேற்கொள்ளும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிதாக 7 மணல் குவாரிகளை திறக்க சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதாகவும், வங்கி வரைவோலை மட்டுமின்றி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூல மாகவும் பணம் செலுத்தும் நடை முறை விரைவில் கொண்டுவரப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது.

இருப்பினும், தமிழகத்தில் மணல் விற்பனை வெளிப்படையாக இல்லாததால்தான் மணல் தட்டுப் பாடும், விலை உயர்வும் ஏற்படு கிறது என்று கட்டுநர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையில், புதிதாக உரு வாக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலம் மணல் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்தி முன்னுதாரண மாகத் திகழ்கிறது.

தெலங்கானா மாநில தொழில், வர்த்தகத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தெலங்கானா மாநில கனி மங்கள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் மணல் விற்பனை மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறை (Sand Sale Management and Monitoring System) உருவாக்கப்பட்டுள்ளது. மணல் விற்பனை தொடர்பான முழு விவரங்களையும் www.sand.telangana.gov.in என்ற அரசு இணையதளத்தில் பார்க்கலாம். மாவட்டம், தாலுகா, கிராமத்தின் பெயருடன், மணல் சேமிப்புக் கிடங்கின் பெயர், முகவரி, கிடங்கின் ஒப்பந்ததாரர், அவரது செல்போன் எண், கிடங்கில் உள்ள மணல் இருப்பு (கன மீட்டரில்), ஒரு கன மீட்டர் மணல் விலை ரூ.550 என அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு மணல் விற்பனை ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடப்பதால் முறைகேடு தவிர்க்கப்படுவதுடன் மணல் தட்டுப்பாடு, மணல் விலை ஏற்றம், கடத்தல் போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லை என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறிய போது, ‘‘தெலங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் 324 மணல் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் உள்ள மணல் இருப்பு விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அங்கு தெலங்கானா, ஆந்திர மாநில லாரிகள் தவிர வேறு மாநில லாரிகளுக்கு மணல் கொடுப்பதில்லை. கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் மணல் லாரிகள் போக்கு வரத்து கண்காணிக்கப்படுவதால் கடத்தலும் தடுக்கப்படுகிறது. இது போன்ற வெளிப்படைத்தன்மையை தமிழ்நாடு அரசு பின்பற்றினால் மட்டுமே கட்டுநர்கள், பொதுமக்க ளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கும். அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக் கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்