திருமலையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்- நாடாளுமன்ற குழு அறிக்கை

தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எம்.பி வெங்கையா நாயுடு தலைமையிலான நாடாளுமன்ற ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சாதாரண நாட்களில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களும், விசேஷ நாட்களில் சுமார் 1லட்சம் பக்தர்களும் திருமலையில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அன்னதானம் வழங்கும் இடத்திலும் தினந்தோறும் 50 ஆயிரம் முதல் 60ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். லட்டு வாங்கும் இடம், தங்கும் அறைகள் போன்ற இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் வெளியேறவும், தீவிபத்துகளை உடனடியாக சீர்செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் கூடுதல் கண்காணிப்பு குழுவை திருமலை முழுவதும் ஏற்பாடு செய்ய வேண்டும். அலிபிரி மலை அடிவாரத்தில் இருந்து திருமலை முழுவதும் பாது காப்பை அதிகரிக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE