தமிழக மீனவர்கள் 125 பேரின் காவலை ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 110 மீனவர்கள் இலங்கை முல்லைத் தீவு கடல் பகுதியில் டிச.11-ம் தேதி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மீனவர்கள் அனைவரும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்களின் காவல் திங்கள் கிழமை முடிவடைந்தது. இதை அடுத்து அவர்கள் திரிகோண மலை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி சரவணக்குமார், அவர்களது காவலை ஜனவரி 20-ம் தேதி வரை மூன்றாவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும் மண்டபத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை ஜனவரி 2-ம் தேதி சிறைப்பிடித்தது. அவர்களது காவல் திங்கள்கிழமையோடு முடி வடைந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களின் காவலை ஜனவரி 20 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago