கோத்தகிரி பனகுடி வனத்தில் முன்னோர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் நடுகல்: காக்கும் பணியில் பழங்குடியினர்

By ஆர்.டி.சிவசங்கர்

கோத்தகிரி பனகுடி வனத்தில் பண்டைய காலத்தில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை சித்தரிக்கும் நடுகற்களை, பழங்குடியின மக்கள் பாதுகாத்து வருகின்றனர். தமிழகத்தில் பழங்கால மக்களின் வாழ்க்கை குறித்து அறியும் ஆதாரங்கள், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்படுகின்றன. இங்கு 6 பண்டைய பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, கோத்தகிரியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பனகுடி கிராமம், இருளர் இன பழங்குடிகள் வசிக்கும் இடமாக உள்ளது.

இக்கிராமத்தையொட்டி அமைந்துள்ள காப்புக் காடுகளில், பண்டைய நடுகல்கள் உள்ளன. அதில், முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், தொழில் உள்ளிட்ட வாழ்வியல் முறைகள் சித்திரமாக செதுக்கப்பட்டுள்ளன.

3,000 ஆண்டு நடுகற்கள்

இந்நிலையில், இந்த இடம் தொல்லியல் துறையின் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு, இந்த நடுகற்கள் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அறியப்பட்டுள்ளது. மேலும், இந்த வரலாற்றுச் சுவடுகள் அழிந்துபோகாமல் இருக்க, அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து, பெயர்ப்பலகைகள் வைத்து பராமரித்து வருகின்றனர்.

இப்பகுதியில் எந்தவித நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.5,000 அபராதம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளனர்.

நடுகல் உள்ள வனத்தை, அப்பகுதியில் வசிக்கும் இருளர் இன பழங்குடிகள் பாதுகாத்து வருகின்றனர். இதற்காக, தனிக் குழுவையும் அமைத்துள்ளனர்.

இதுதொடர்பாக இருளர் இனத் தலைவர் மணி கூறும்போது, “இந்த வனத்தில் பஞ்ச பாண்டவர்கள் குடியிருப்பதாக எங்களின் ஐதீகம். இங்கள்ள நடுகற்களும் அவர்களை குறிப்பதாக உள்ளன. இங்கு பஞ்சபாண்டவர்களுக்கு கோயில் அமைத்து வழிபட்டு வருகிறோம்.

சித்திரை மாதத்தில், இங்கு சிறப்பு வழிபாடு நடத்துவோம். இப்புனிதமான வனத்தை பாதுகாக்க அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

உதகை அரசு கலைக்கூட காப்பாட்சியர் ரவிச்சந்திரன் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, நீர்காச்சி மந்து, பொக்காபுரம், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடுகல், சுடுமண் சிற்பங்கள், முதுமக்கள் தாழி, பாறை ஓவியங்கள், மற்றும் புதைக்குழி கலாச்சாரங்கள் கண்டெடுக்கப்பட்டு, வரலாற்று சிறப்பு வாய்ந்த பொக்கிஷ பூமியாக திகழ்கிறது.

இதுபோன்ற காலச்சுவடுகளை பாதுகாக்க, தொல்லியல் துறை மற்றும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, மாவட்ட மக்களும் தனி அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்