வடசென்னையில் அதிகரித்து வரும் கொசுத் தொல்லை: ரூ.11 கோடி செலவில் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் மாநகராட்சி

By ச.கார்த்திகேயன்

வட சென்னையில் அண்மைக் காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து வரு வதால், அப்பகுதியில் வாழும் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

வட சென்னையில் கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், ஓட்டேரி நல்லா, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை செல்கின்றன. இவை ஒரு காலத்தில் மழைநீர் கால்வாய்களாகவே இருந் தன. தற்போது இந்த கால்வாய்களில் ஆகாயத் தாமரை செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் அவை கொசு உற்பத்தி மையங்களாக மாறியுள்ளன.

கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் சென்னையில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், அந்த கால்வாய்களில் நீர் வற்றி காய்ந்திருந்தது. இதனால் கொசு உற்பத்தி குறைந்தது. தற்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், கால்வாய்களில் வளர்ந்திருந்த ஆகா யத் தாமரை செடிகள் மற்றும் குப்பை களால் நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி, மீண்டும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் வட சென்னை வாழ் மக்கள், கொசுக் கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மகாகவி பாரதியார் நகரைச் சேர்ந்த ஞானம் கூறும்போது, “இப்பகுதியில் மாலை 6 மணிக்கே கொசுத் தொல்லை தொடங்கிவிடுவதால், ஓடி விளையாட வேண்டிய குழந்தைகள், கொசு வலைக்குள் முடங்கிவிடுகின்றனர். தட்டில் கொசு விழுந்துவிடும் என்பதால் இரவு உணவைக் கூட கொசு வலையினுள் சென்று உண்ண வேண்டியுள்ளது. புகை மருந்துகள் அடிக்கப்பட்டாலும், அவற்றுக்கு இந்த கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. எனவே இப்பகுதியில் கொசுவை ஒழிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னை முழுவதும் மொத்தம் 30 கால்வாய்கள் உள்ளன. அவற்றில் மிதக்கும் பொருட்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளால்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனால் அந்த கால்வாய்களில் மிதப்பவற்றை அகற்ற, ரூ.11 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கொசு தொல்லை ஒழியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்