அரசுப் பேருந்துகளை இயக்க மணல் லாரி ஓட்டுநர்களுக்கு நிர்பந்தம்: தவறான நடவடிக்கை என குற்றச்சாட்டு

By ஜெ.ஞானசேகர்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பேருந்து போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனியார் பேருந்துகள், தனியார் பேருந்து நிறுவனங்களின் மாற்றுப் பேருந் துகள், ஆம்னி பேருந்துகள், மினி பஸ்கள் ஆகியவற்றை முழு அளவில் இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், தற்காலிக ஓட்டுநர், நடத்து நர் தேர்வும் நடைபெற்று வருகி றது.

இந்தநிலையில், திருச்சி கொண்டையம்பேட்டை மணல் குவாரியில் நேற்று மணல் அள்ளு வதற்காக வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுநர்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அணுகி, அரசுப் பேருந்துகளை இயக்க வருமாறு நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்த லாரி ஓட்டுநர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர், குறிப் பிட்ட எண்ணிக்கையிலான மணல் லாரி ஓட்டுநர்கள், அரசுப் பேருந்து களை இயக்கியதாக தெரிகிறது.

இதற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சம்மேளனத் தலைவர் செல்ல.ராஜமணி கூறும்போது, “வழக்கமாக ஒரு கனரக வாக னத்தை இயக்கி வரும் ஒருவ ரால், திடீரென வேறொரு வாகனத்தை அதே லாவகத்துடன் தொடர்ந்து கவனமாக ஓட்ட முடி யாது. எனவே, தற்காலிக அடிப் படையில் பேருந்துகளை இயக்கு வோரால் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் அதற்கு அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சம்பத் கூறும்போது, “அனுபவம் இல்லாமல் அரசுப் பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர் களால் கடந்த 2 நாட்களில் சிறு சிறு விபத்துகள் நேரிட்டுள்ளன. பெரிய அசம்பாவிதம் நேரிடும் முன் தற்காலிக அடிப்படையில் பேருந்துகளை இயக்கும் நடவடிக் கையை கைவிட்டு, போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்” என்றார்.

இதுகுறித்து அரசுப் போக்கு வரத்துக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, “அரசுப் பேருந்துகளை இயக்கு வதற்கு விரும்பி வருவோரின் கனரக வாகன ஓட்டுநர் உரி மத்தை ஆய்வு செய்து உறுதி செய்த பிறகு, அவர்களுக்கு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில், தகுதியானவர்கள் மட்டுமே பேருந்துகள் இயக்க தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

யாரையும் நிர்பந்தப்படுத்தி அழைக்கவில்லை. அதன்படி, கடந்த 2 நாட்களில் அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலத்தில் தற்காலிக அடிப் படையில் 175 ஓட்டுநர்கள், 192 நடத்துநர்கள் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் எந்த அசம்பாவிதமும் நேரிடவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்