பலாத்கார வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்ப கூடாது: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்

பாலியல் பலாத்கார வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்பக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக வழக் கறிஞர்கள் கீதா ராமசேஷன், என்.எல்.ராஜா, ஏ.ஜே.ஜவாத் உள் ளிட்டோர் எழுதிய அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த மோகன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் சமரச மையத்தில் தீர்வு காணலாம் என்று உத்தர விட்டுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்குகளை சமரச மையத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்பது ஏற்புடையது அல்ல. ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு அதனால் குழந்தையும் பிறந்தால், சம்பந்தப்பட்ட ஆணை திருமணம் செய்து கொள்ளவேண் டும் என்று கூறுவது ஆணாதிக்க நெறிமுறைகளை வலுப்படுத்துவது போல் உள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்படு பவரின் உரிமை மறுக்கப்படுகிறது. இது சமரச மைய நடவடிக்கை களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இந்த வழக்கின் தீர்ப்பை விசாரணை நீதிமன்றங் களும் பின்பற்றும் நிலை உருவாகி யுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வழக்கை சமரச மையத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும். பாலியல் வழக்குகளை சமரச மையங்களுக்கு அனுப்பக் கூடாது என்று தலைமை நீதிபதி அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தண்டனை வழங்க கோரிக்கை

இந்த வழக்கில் தொடர்புடைய பெண் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இத்தனை வருடங்களாக திருமணம் செய்து கொள்ள அவர் முன்வரவில்லை. இப்போது மட்டும் எப்படி திருமணம் செய்து கொள்வார்? சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை பெறுவதற்காக அவர் நடத்தும் ஏமாற்று வேலை இது. இதனை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. கடுமையான தண்டனை வழங்கும் வகையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். ஏற்கெனவே, கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதற்கு ஏற்ப, ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொகையை எனக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்