பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத்தை மாற்றலாம் - மு. க. ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் பகுதி திமுக சார்பில் பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா, தண்டையார்பேட்டையில் வியாழக்கிழமை நடந்தது. இதில், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஸ்டாலின் பேசிய தாவது:

வடசென்னை பகுதியில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆளுங் கட்சியாக இல்லாவிட்டாலும், மக்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்குவதில் ஆளுங் கட்சியாகவே செயல்படுகிறது.

பெண்களுக்கு நாட்டு நடப்புகள் தெரிய வேண்டும். பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும். வீட்டை பாதுகாக்கும் நீங்கள், நாட்டை யார் ஆட்சி செய்வது நல்லது என யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

கடையில் பொருள்கள் வாங்கும் போது, பெண்கள் தரம் பார்த்து வாங்குவது போல், நாட்டை யார் ஆண்டால் நன்றாக இருக்கும் என்று தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொடர்ந்து பாடுபடும் திமுகவுக்கு நீங்கள் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

கட்சியின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., துணைப் பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன் மற்றும் வடசென்னை மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்