சென்னை கோயம்பேடு வணிக வளாகம், சாத்தாங்காட்டில் உள்ள கடைகள் சனிக்கிழமையன்று குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் மறைமலைநகர், மணலி புதுநகரில் காலிமனை ஒதுக்கீடு மற்றும் கோயம்பேடு, சாத்தாங்காடு பகுதியில் கடை ஒதுக்கீடு வழங்க கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள 4 கடைகள், சாத்தாங்காடு இரும்பு எஃகு அங்காடியில் உள்ள 154 கடைகளுக்கு எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் சனிக்கிழமை குலுக்கல் நடந்தது. சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரி மலைச்சாமி முன்னின்று குலுக்கலை நடத்தினர்.
கோயம்பேட்டில் உள்ள 4 கடைகளுக்கு 261 பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சாத்தாங்காட்டில் உள்ள 154 கடைகளுக்கு 27 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் குலுக்கலில் கடை கிடைத்தது. 45 நிமிடத்தில் குலுக்கல் முடிந்து கடைகள் ஒதுக்கப்பட்டன.
மறைமலைநகர், மணலி புதுநகரில் வீட்டு மனைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 12-ம் தேதி குலுக்கல் நடக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago