என்எல்சியில் தொழிலாளி சுடப்பட்டு இறந்த சம்பவத்தில் சிஐஎஸ்எப் வீரர் கைது செய்யப்பட்டார். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
என்எல்சியில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளி ராஜ்குமாரை சிஐஎஸ்எப் வீரர் முகமத் நோமன் திங்கள்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இச்சம்பத்தை தொடர்ந்து நெய்வேலியில் கலவரம் வெடித்தது. தடியடி, கல்வீச்சு, கண்ணீர்புகை குண்டு வீச்சு என அந்த பகுதியே போர்க்களமானது. 38 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் படுகொலையையும் போலீஸாரையும் கண்டித்து நெய் வேலியில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடந்தது. இதனால் மந்தாரக்குப்பம், டவுன்ஷிப்பில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிகளுக்கு திடீரென விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. என்எல்சி தொழிலா ளர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் 150 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கடலூர் மத்திய சிறையில் நோமன்
நெய்வேலியில் 500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய விழுப்புரம் சரக டிஐஜி எஸ்.முருகன், “சிஐஎஸ்எப் வீரர் சுட வேண்டிய அவசியமே இல்லை. தன்னை தற்காத்துக் கொள்ள மட்டுமே எந்த ஒரு வீரரும் துப்பாக்கியை பயன்படுத்தலாம். ஆனால் வந்தவர் தனிநபர். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை. எனவே இச்சம்பவம் கொலையாகத்தான் கருதப்படும்” என்றார்.
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய சிஐஎஸ்எப் வீரர் முகமத் நோமனை திங்கள்கிழமை இரவு கைது செய்த மந்தாரக்குப்பம் போலீஸார், செவ்வாய்க்கிழமை நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
உடலை வாங்க மறுப்பு
கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உடலை ஒப்படைத்தபேது அதை வாங்க ராஜ்குமாரின் உறவினர்கள் மறுத்துவிட்டனர். ரூ.10 லட்சம் நிவாரணம், நிரந்தர வேலை வழங்கினால்தான் உடலை பெறுவோம் என மூவேந்தர் முன்னேற்றத் தொழிற்சங்க செயலர் செல்வக்குமார் தெரிவித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்திடம் தொமுச பேச்சுவார்த்தை நடத்தியது.
மனைவிக்கு வேலை; ரூ.5 லட்சம்
இந்நிலையில், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய தொமுச பொதுச்செயலர் ராசவன்னியன் கூறியதாவது: இறந்த தொழிலாளியின் மனைவிக்கு நிரந்தர வேலை வழங்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் அதற்கான கடிதத்தை அளித்துள்ளது. இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சமும், ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்காக ரூ.50 ஆயிரம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் தமிழ் தெரிந்த வீரர்களை நியமிக்க சிஐஎஸ்எப் டிஐஜி ஆனந்தமோகன் ஒப்புக்கொண்டுள்ளார். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார் என்றார்.
என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் கூறுகையில், “பலியான ராஜ்குமார் என்பவர் தற்போது ஒப்பந்தத் தொழிலாளியாக பணியில் இல்லை. எனவே, அவரது மனைவிக்கு வேலை வழங்க இயலாது என்ற போதிலும்,மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெற்று பணி வழங்க ஆவண செய்யப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago