நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதி மன்றங்களை புறக்கணித் துவிட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன் றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக 10 வழக்கறிஞர்கள் உள்பட 12 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கள் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரைப் பட்டி யலை திரும்பப் பெறக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும். எல்லா சமூகங்களுக் கும் பெண்களுக்கும் உரிய பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும். தகுதியான வழக்கறிஞர் களையே நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்து வரு கிறது.
இந்தக் கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி ஏற்கெனவே ஜனவரி 8 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நீதிமன்றங்களைப் புறக்கணித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டங் களை நடத்தினர்.
பொதுக்குழுக் கூட்டம்
இந்நிலையில் இந்த விவ காரம் குறித்து விவாதிப் பதற்காக உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங் கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. சங் கத்தின் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத் தில், கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை (இன்று) மீண்டும் நீதி மன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருநாள் உண்ணா விரதப் போராட்டம் நடத்த வும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்ற முடிவை பெண் வழக்கறிஞர்கள் சங்கமும் எடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago