அகதிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்தவர் கைது

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த இலங்கையைச் சேர்ந்த கைதியை செங்கல்பட்டு நகர போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் இலங்கைத் தமிழர்களை தமிழகத்திலிருந்து, வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சிறப்பு முகாமில், தமிழகம் வந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் அயல் நாட்டவர் அடைத்து வைக்கப்படுகின்றனர். அவ்வாறு தற்போது 27 இலங்கைத் தமிழர்கள், 5 நைஜீரியர்கள், 3 வங்கதேச நாட்டவர் என மொத்தம் 35 பேர் உள்ளனர். மேலும் பலர் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு, சிறப்பு முகாம்களில் இருந்து திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் தன்னை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அருள்ராஜ் சிறப்பு முகாமினுள் புதன்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார். மேலும் அங்கிருப்பவர்களையும் உண்ணாவிரதம் இருக்கத் தூண்டியுள்ளார். இதை அறிந்த செங்கல்பட்டு நகர போலீஸார் சிறையினுள் உண்ணாவிரதம் இருந்தவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்