முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
திண்டுக்கல் கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் டி.ராமசாமி. பழனி ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலராக இருந்தவர். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சி வழங்கி வந்தார். அவரது நிர்வாகத்தின் மீது தமிழகத்தில் வாழும் 90 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதால் 6 முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் 22.9.2016ல் இரவ 10.45 மணியளவில் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் ஜெயலலிதா உடல் நிலை தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் இருந்தோ, ஆளுநர் அலுவலகத்தில் இருந்தே எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
பின்னர் ஜெயலலிதா உடல் நலம் தேறி வருகிறார். ஒன்றிரண்டு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டன. இதனால் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என பொதுமக்கள் நம்பினர். மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க பல அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றனர். ஆனால் அவர்கள் யாரையும் ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் மருத்துவமனையில் இருந்த வி.கே.சசிகலா மற்றும் அவரது ஆட்கள் தடுத்துவிட்டனர்.
பொதுமக்களுக்கு சர்வதேச தரத்தில் உயர் தர சிகிச்சை வழங்கி தமிழகத்தை நோயில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என ஜெயலலிதா விரும்பினார். இதனால் சென்னையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்தினார். இதற்கு மாறாக அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா சேர்த்தார். சசிகலாவும், மருத்துவமனை நிர்வாகமும் ஜெயலலிதாவின் விருப்பம், கனவுக்கு எதிராகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் நடந்து கொண்டனர்.
இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டதாக அறிவித்தது. அப்போது கூட ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பின்னர் ஜெயலிலதா 5.12.2016ம் தேதி 11.30 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்தச் செய்தி கேட்டு பொதுமக்கள், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
மருத்துவமனையில் செப். 22 முதல் டிச. 5-ம் தேதி வரை ஜெயலிலதா சசிகலா மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர். இந்த சந்தேகத்தை மத்திய, மாநில அரசுகள் தீர்க்க வேண்டும்.
ஜெயலிலதா சசிகலாவின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்து வந்தார். சசிகலாவின் உறவினர்கள் 12 பேர் ஜெயலலிதா மீதும், ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் செலுத்தினர். சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன் மற்றும் உறவினர்கள் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் 2011ல் நீக்கப்பட்டனர். பின்னர் மன்னிப்பு கடிதம் அளித்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா அதிமுகவில் சேர்த்துக்கொண்டார். சசிகலாவின் உறவினர்களை சாகும் வரை ஜெயலலிதா கட்சியில் சேர்க்கவில்லை.
ஜெயலலிதாவை சசிகலா, அவரது உறவினர்களும், மருத்துவமனை நிர்வாகமும் கொலை செய்ததாக மக்களும், கட்சியினரும் நம்புகின்றனர். ஜெயலலிதாவின் இரு கால்களும் அகற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியதற்கான அடையாளம் அவரது உடலில் காணப்பட்டது.
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி டிச. 14ல் மனு அனுப்பினேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐக்கு வழங்க உள்துறை செயலர், தலைமைச் செயலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் புகழேந்தி வாதிடும்போது, இது போன்று ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago