மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என 9 நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் ஒவ் வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும்.
சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ் வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும். குரு ஓராண்டு, ராகு- கேது ஒன்றரை ஆண்டு, சனி இரண்டரை ஆண்டுகள் என ஒவ்வொரு கோளும் ஒரு ராசியில் சஞ்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலம் வேறுபடும்.
இவற்றில் குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெறும் போது கோயில்களின் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் செய்யப் படும்.
குரு ஆண்டுதோறும் இடம் பெயர்வதால் பெரும்பாலான ஆண்டுகளில் குருப்பெயர்ச்சி ஏற்படும். ராகு-கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் ஒரு சில ஆண்டுகளில் ராகு-கேது பெயர்ச்சி இருக்காது. அதேபோல, சனிப் பெயர்ச்சி இரண்டரை ஆண்டு களுக்கு ஒரு முறை ஏற்படுவதால் ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு சனிப் பெயர்ச்சி இருக்காது.
ஆனால், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு-கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 27-ம் தேதி ராகு- கேது பெயர்ச்சி, செப்டம்பர் 2-ம் தேதி குருப் பெயர்ச்சி, டிசம்பர் 19-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago