சென்னையில் மின்சார வாரியத்தின் மின் இணைப்பு வழங்குவதற்கு, பூமிக்கு அடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பி.எஸ்.என்.எல்., ஏர்செல், ரிலையன்ஸ் உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தங்களது ஆப்டிகல் கேபிள்களை பூமிக்கு அடியில் தான் பதித்துள்ளன.
சென்னை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்கு கம்பங்களுக்கும், பூமிக்கு அடியில் தான் மின் இணைப்பு கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மாநகர் முழுவதும் தெருவிளக்குகளிலோ அல்லது வேறு கம்பங்கள் மூலமோ கேபிள்களை இணைக்கவோ, நீட்டிக்கவோ இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மாநகர் முழுவதும், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஏஜெண்டுகள் மற்றும் ஒரு சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட எந்த அரசுத்துறையிடமும் அனுமதி பெறாமல், கேபிள்களை கொண்டு செல்கின்றன.
இந்த கேபிள்கள் அவ்வப்போது அறுந்து சாலையின் மத்தியிலும், பிளாட்பாரத்திலும் விழுந்தும், அறுந்து பாதியில் தொங்கிக் கொண்டும், வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளை பயமுறுத்துகின்றன. மேலும், தெரு விளக்கிலிருந்து இந்த கேபிள்கள் மூலம் மின்சாரக் கசிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
இதுகுறித்து, பாரிமுனையில் கேண்டீன் வைத்திருக்கும் மணி என்பவர் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலாக அனுமதியற்ற கேபிள்கள் உள்ளன. ஆனால், போலீஸாரும், இப்பகுதியிலுள்ள மாநகராட்சி ஊழியர்கள் சிலரும், தனியார் நிறுவன கேபிள்களுக்கு, மறைமுகமாக அனுமதியளிக்கின்றனர்,’என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago