தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு திங்கள் கிழமை காலை 7.35 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டான ஐய வருடம் பிறக்கிறது.

இதையொட்டி சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தியாகராய நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், பிராட்வே காளிகாம்பாள் கோயில், மற்றும் கந்தகோட்டம், திருநீர்மலை, திருவேற்காடு, மாங்காடு, குன்றத் தூர், திருக்கழுக்குன்றம் உள் ளிட்ட கோயில்களில் திங்கள் கிழமை அதிகாலையில் இருந்தே சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE