விவாகரத்து வழக்கில் முடிவு வரும் வரை ஜீவனாம்சம் வழங்குவதை நிறுத்தக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

விவாகரத்து வழக்கில் இறுதி முடிவுவரும் வரை ஜீவனாம்சம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மரிய லாரன்ஸ். இவரது மனைவி மேரி பேபி. இருவரும் 1989 முதல் பிரிந்து வாழ்கின்றனர். மேரிக்கு மாதம் ரூ.350, அவரது மகளுக்கு மாதம் ரூ.150 ஜீவனாம்சம் வழங்க இரணியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மேரியும், அவரது மகளும் ஜீவனாம்சம் பெற்று வந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு 2009-ல் விவகாரத்து வழங்கப்பட்டது. அப்போது மேரிக்கு மொத்தமாக ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மேரிக்கு மாதம் தோறும் ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி மரிய லாரன்ஸ் இரணியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று மாத ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இதை ரத்து செய்யக்கோரி மேரி பேபி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், விவகாரத்தை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளேன். அந்த மனு நிலுவையில் உள்ளது. கணவர் டெபாசிட் செய்த பணத்தையும் இன்னும் எடுக்கவில்லை. அப்படியிருக்கும் போது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி பிறப்பித்த ஜீவனாம்ச உத்தரவை குற்றவியல் நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்து நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:

உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து இன்னும் இறுதி பெறவில்லை. விவாகரத்தை மனுதாரரும் ஏற்கவில்லை. விவாகரத்து வழங்கி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டதும் ஜீவனாம்சம் உத்தரவை நீதித்துறை நடுவர் ரத்து செய்ய முடியாது.

சில வழக்குகளில் உரிமையியல் நீதிமன்றங்கள் குறைவாக ஜீவனாம்சம் நிர்ணயம் செய்கின்றன. அந்த தொகை போதுமானதா என்பதை ஆய்வு செய்த பிறகே உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதனால் இரணியல் நீதித்துறை நடுவரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்