அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் 18 ஆயிரம் தினக்கூலி ஊழியர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் இல்லை: கடந்த 6 ஆண்டுகளாக தொடரும் அவலம்

By கி.ஜெயப்பிரகாஷ்

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 18 ஆயிரம் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்காததால், கடந்த 6 ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றியமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரையில் மொத்தம் 12 ஊதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தத்திலும் தினக் கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் ஒருநாள் ஊதியம் ஓட்டுநருக்கு ரூ.597, நடத்துநர் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தொழிலாளர்களுக்கு தலா ரூ.588 தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தினக் கூலி ஓட்டுநருக்கு ரூ.335, நடத்து நர் மற்றும் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்களுக்கு ரூ.330 என குறைக்கப்பட்ட ஊதியமே வழங் கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் சுமார் 18 ஆயிரம் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்துத் துறையில் பணியாற்றும் தினக்கூலி ஓட்டுநர்கள், நடத்துநர் கள் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

‘‘அரசு போக்குவரத்துத் துறை யில் நிரந்தர பணி கிடைக்கும் என நம்பி இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தினக்கூலி அடிப்படையில் பணிக்கு வந்தோம். நாங்கள் வந்து சுமார் 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரையில் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.

எங்களுக்கு ஊதியக் குழு ஒப் பந்த அடிப்படையில் தினக்கூலி வழங்கப்படுவதில்லை. ஓட்டு நருக்கு ரூ.335, நடத்துநருக்கு ரூ.330 தான் கிடைக்கிறது. மாதத்துக்கு 20 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இந்த வருமானத்தை கொண்டு எங்களால் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே கஷ்ட மாக உள்ளது.

8 மணி நேரம் பணி என நிர்வாகம் சொல்கிறது. ஆனால், போக்குவரத்து நெரிசலால் பணிகளை முடிக்க 12 மணி நேரம் வரை ஆகிறது. தினமும் பணியை முடித்து வீட்டுக்குச் செல் லும்போது உடல் வலியாலும், மனச்சோர்வாலும் நாங்கள் கடும் அவதிப்படுகிறோம்’’ என்றனர்.

இது தொடர்பாக தொமுச பொரு ளாளர் கி.நடராஜன் கூறியதாவது:

தமிழக போக்குவரத்துத் துறை யில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதுவரையில் மொத்தம் 12 ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

1992-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த ஊதியம், அரசு போக்குவரத்துக் கழகங் களில் போதிய நிதி இல்லை எனக் கூறி கடந்த 6 ஆண்டு களாக திடீரென குறைக்கப்பட்டு ஓட்டுநருக்கு ரூ.335, நடத்து நருக்கு ரூ.330 வழங்கப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர்.

அரசு போக்குவரத்துக் கழகத் தில் வீண் செலவுகளைக் குறைத்தா லேயே, பல ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, சமீபத்தில் பல்லவன் இல்லத்தில் புதிய பஸ்கள் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சுமார் 150 பஸ்கள், லட்சக்கணக்கில் செல விட்டு மலர்களால் அலங்கரிக்கப் பட்டன. ஆனால், எவ்வித காரண மும் தெரிவிக்காமல், திடீரென இந்த விழா ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்