*
முதல்வர் நாராயணசாமியின் நிதி அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் ஆளுநர் கிரண்பேடி இறங்கி பிறப்பித்த ஆணையை அறிவிக்கையாக வெளியிட தலைமை செயலர் மறுத்து, அக்கோப்பை உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமியும் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதே நேரத்தில் இரு தரப்புக்கும் இடையில் மோதலும் உச்சத்தை எட்டியுள்ளது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிலுவையில் உள்ள நிலையிலும் போட்டிகள் தொடர்ந்தபடியே உள்ளன. ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நிதித்துறையை வைத்துள்ள முதல்வர் நாராயணசாமியின் நிதி அதிகாரங்களை மொத்தமாகத் திரும்பப் பெறும் வகையில் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ள விவரம் தற்போது வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
''புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி என்ற முறையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல்வருக்கான நிதி ஆதாரங்களை ரத்து செய்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார்.
யூனியன் பிரதேச முதல்வருக்கு தற்போது ரூ.10 கோடி வரை செலவிடும் அதிகாரம் உள்ளது. துறைச் செயலாளர்களுக்கு ரூ.2 கோடி வரை செலவிடும் அதிகாரம் உள்ளது. இந்த உத்தரவின் மூலம் முதல்வரின் நிதி அதிகாரத்தை முற்றிலும் குறைத்து விட்டு, நிதி விவகாரங்களில் எந்த அதிகாரமும் இல்லாத தலைமைச் செயலாளருக்கு ரூ.5 கோடி வரை செலவிடும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் துறை செயலாளர்களின் நிதி அதிகாரங்களை திரும்பப் பெறும் வகையில் அவ்வுத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தலைமைச் செயலாளருக்கு நிதி அதிகாரத்தை ரூ.5 கோடியாக்கியிருந்தார்.
இந்த உத்தரவு குறித்த அறிவிக்கையை வெளியிடுமாறு தலைமைச் செயலர் மனோஜ் பரிதாவுக்கு, ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். ஆனால், தலைமைச் செயலாளர் அந்த உத்தரவை செயல்படுத்த மறுத்து விட்டார். இவ்வுத்தரவு கோப்பினை உள்துறை செயலருக்கு புதுச்சேரி தலைமைச் செயலர் அனுப்பி வைத்து விட்டார். கிரண்பேடி தொடர்பான உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இதனால் தற்போதைய நிலையே தொடருகிறது.
ஆளுநரின் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் நிதி துறையை வைத்திருக்கும் முதல்வரால் எந்த திட்டத்துக்கும் ஒரு ரூபாய் கூட ஒதுக்க முடியாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கு ரூ.50 கோடி வரையிலான நிதி செலவிடும் அதிகாரம் கிடைத்து விடும்.
மேலும் அமைச்சர்களும் தங்கள் துறைச் செயலாளர்கள் மூலம் ரூ.2 கோடி செலவிடும் உரிமையை இழந்து விடுவர் என்று குறிப்பிட்டனர்.
அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடி தரப்பில் கூறுகையில், "நிதி விவகாரங்களில் மேலும் செம்மையாக செயல்படும் ஏதுவாகும்" என்று குறிப்பிடுகின்றனர். ஆளுநரின் இந்த உத்தரவு குறித்து கேட்டதற்கு முதல்வர் நாராயணசாமி பதில் எதையும் கூறவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago