உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சியினர் இப்போதிருந்தே வாக்காளர்களை சந்திக்கத் தொடங்கி உள்ளதால், தேனி மாவட்டத்தில் மீண்டும் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி தொகுதிகளில் 6 நகராட்சிகள், 24 பேரூராட்சிகள், 130 ஊராட்சிகள் உள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம், வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. 25-ம் தேதி புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்க வேண்டும் என்பதால், இதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே, இம்மாவட்டத்தில் கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் 72 சதவீதத்துக்கும் மேலாக இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இதன் காரணமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என அனைத்து பதவிகளையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களின் போது கட்சியின் சின்னம் மற்றும் அக்கட்சியின் தலைவர்களை பார்த்து வாக்களிக்கும் வாக்காளர்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஜாதி மற்றும் உள்ளூரை சேர்ந்தவரா? அவரை எளிதில் சந்திக்க முடியுமா? மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை தருவாரா? என்பதை பார்த்துத்தான் பெரும்பாலோனோர் வாக்களித்து வருகின்றனர். இதனால் சட்டப்பேரவையில் எதிர் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள திமுகவினர், உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளனர். இதற்கிடையில் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த மக்கள் நல கூட்டணியினரும் சோர்ந்து போகாமல் களத்தில் இறங்கியுள்ளனர். நாங்களும் சளைத்தவர்கள் இல்லையெ என்று தேசிய கட்சியான பாஜகவும், ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறாத பாமக, நாம்தமிழர் கட்சியினரும் ஒரு சில இடங்களையாவது கைப்பற்றாமல் விடமாட்டோம் என்று மார்தட்டி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில், மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் இப்போது இருந்தே வாக்காளர்களை சந்திக்க தொடங்கியுள்ளதால், பேரவைத் தேர்தல் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய சில நாட்களிலேயே மக்களிடம் தற்போது மீண்டும் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டது. இதேபோல் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் உள்ளாட்சி தேர்தல் ஆயுத்த பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago