ஆம் ஆத்மிக்கான ஆதரவை வாபஸ் வாங்க வலியுறுத்துவோம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

By செய்திப்பிரிவு

"டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அளித்துவரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும் என மேலிடத்தை வலியுறுத்துவோம்" என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் தெரிவித்தார்.

சேலத்தில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு வந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும். காங்., தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளது.

காங்., செய்த சாதனையை முன் வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வோம். காங்கிரஸ் ஊழல் செய்ததாக பா.ஜ. கூறி வருகிறது. ஆனால், இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பா.ஜ. பிரமுகர் பங்காரு லட்சுமணன் ஊழல் வழக்கில் சிக்கி கையும் களவுமாக பிடிபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் தேர்தலுக்கு முன் பஸ்சில் செல்வோம், ரயிலில் செல்வோம் என்றார். காரை பயன்படுத்த மாட்டோம் என்றார். ரயிலில் அவர் சென்றது உண்மை தான். ஆனால், ரயிலில் சென்றதற்கு டிக்கெட் வாங்கவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்